[ad_1]





`தி க்ரேட் காளி’  என்று அனைவராலும் அறியப்பட்டவர் WWE இந்திய பங்கேற்பாளரான தலீப் சிங் ராணா. இவர் இன்று மதியம் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானைப் போபாலில் சந்தித்துப் பேசியுள்ளார். அவர்களின் புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


 


உலகளவில் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட WWE மல்யுத்த போட்டியில் முக்கியப் பங்கேற்பாளரான தலீப் சிங் ராணா தொழில்முறை மல்யுத்த வீரர் ஆவார். இவர் இமாச்சலப் பிரதேசத்தில் குக்கிராமத்தில் பிறந்தவர். கடின பயிற்சியாலும் விடா முயற்சியாலும் வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் (WWE) அமைப்புடன் ஒப்பந்தமேற்படுத்திக்கொண்ட முதல் இந்திய தொழில்நிலை மல்யுத்த வீரர் என்னும் பெருமையைப் பெற்றார்.


 

WWE களத்தில் தி அண்டர்டேக்கரை எதிர்த்து நின்றபோதுதான் அவருக்கு உலகளவில் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதுமட்டுமின்றி தலீப் சிங் ராணா தொழில்முறை மல்யுத்த வீரர் ஆவதற்கு முன்னர் பஞ்சாப் மாநில காவல்துறையில் பணிபுரிந்தவர். 2007-ம் ஆண்டு தனது முதல் WWE ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்ற ராணா மூன்று ஹாலிவுட் திரைப்படங்களிலும் தோன்றியுள்ளார். தற்போது முழு நேரமாக WWE போட்டிகளில் பங்குகொள்வதில்லை. நீண்ட இடைவேளைக்கு பின்  2017ல் பிப்ரவரி மாதம் பங்கேற்றார்.  இதனிடையே க்ரேட் காளியின் வாழ்க்கையைச் சினிமாவாக எடுக்க பாலிவுட் இயக்குநர் ஒருவர் திட்டமிட்டுள்ளார். அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கிவிட்டன. இந்நிலையில் இன்று போபாலில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானைச் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");