[ad_1]
மதுரையில் நதிநீர் பாதுகாப்பு ஆர்வலர்கள், வைகை நதி மீட்பு அமைப்பினர், மதுரை மாவட்ட விவசாய அமைப்புகள் நடத்திய 'நதிநீர் பாதுகாப்பு கருத்தரங்கு' நடைபெற்றது. இதில், காந்தியத் தலைவர் அன்னா ஹசாரே கலந்துகொண்டார். கருத்தரங்கில் பேசிய அவர், "மன்மோகன் சிங் ஆட்சியும், மோடி ஆட்சியும் ஒன்றுதான். இரண்டு ஆட்சியிலும் ஊழல் ஒழிக்கப்படவில்லை" என்று கூறியிருந்தார். இது தொடர்பாக விகடன் இணையதளத்தில், 'பி.ஜே.பி. - காங்கிரஸ்'... யார் ஆட்சியில் ஊழல் அதிகம்? என்ற தலைப்பில் சர்வே நடத்தப்பட்டது. இந்த சர்வேயில் கலந்துகொண்ட வாசகர்கள், 'அதிக ஊழல் நடந்தது காங்கிரஸ் ஆட்சியில்' என்று குறிப்பிட்டுள்ளார்கள். மேலும், சர்வேயில் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கானப் பதில்களும் கீழே...
4) ஊழலை ஒழிக்க அரசியல் கட்சிகள் எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என நினைக்கிறீர்கள்?
*அரசியல் நோக்கம் இல்லாமல் எடுக்கப்படும் ஊழல் நடவடிக்கைகள்தான் நாட்டைக் காக்கும்.
*நிதிகளைக் கையாள்வதில் வெளிப்படைத்தன்மை வேண்டும். துறை சார்ந்த கணக்கு வழக்குகளை மாதந்தோறும் வெளியிட வேண்டும்.
*ஒளிவு மறைவு இல்லாத ஜனநாயக நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
*அரசியல் கட்சிகளினுடைய அடிப்படைக் கொள்கையே ஊழல் செய்வதுதான்! பிறகெப்படி அவர்கள் ஊழலை ஒழிக்க முயல்வார்கள்?
*ஒவ்வொரு அரசியல்வாதியும் ஊழல் செய்யமாட்டேன் என்று உறுதிமொழி எடுத்து அதன்படி நடந்தாலே போதும்.
*அனைத்து அரசியல் கட்சிகளுமே ஊழலில் ஒன்றுக்கு ஒன்று உயர்ந்தவைதான்.
*இதுவரை ஊழல் செய்துள்ளவர்களின் சொத்துகளை அரசுடமையாக்கினால், வரும் காலங்களில் ஊழல் குறையும்.
*ஊழல் பணத்தை அரசுடமையாக்க எளிய சட்டம் வேண்டும்.
*தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். பதவிகள் பறிக்கப்பட வேண்டும்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
பி.ஜே.பி., காங்கிரஸ்... எந்த கட்சி ஆட்சியில் ஊழல் அதிகம் தெரியுமா? ஆச்சரிய முடிவு #VikatanSurveyResults
TAGS :
COMMENTS