[ad_1]

கடந்த டிசம்பரில் காலில் சலங்கை கட்டிய தீபா அடுத்த ஆறு மாதங்களுக்குச் சுற்றிச் சுற்றி ஆடினார். அதன்பின் ஒரு பெரிய பிரேக் எடுத்துக்கொண்டவர் முற்றிலும் புதிய ஹேர்ஸ்டைலோடும், 'மல நல்லாருக்கியா மல' வடிவேலு சிரிப்போடும் ஆர்.கே நகரில் ரீ-என்ட்ரியானார். 'எங்க சாமி போனீங்க நீங்க?' என நியூஸ் சேனல்களும் மீம் க்ரியேட்டர்களும் பாசக்கண்ணீர் வடித்த சில மணிநேரங்களுக்குள், 'நீ அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி' என திரும்ப அனுப்பிவைத்துவிட்டது தேர்தல் ஆணையம். அப்செட்டாகி உட்கார்ந்திருக்கும் தீபாம்மாவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? சில டிப்ஸ்கள்!




* இப்போதைய ட்ரெண்ட் மத்திய அரசை தொடர்ந்து திட்டி அதன்வழியாக ஐ.டி அதிகாரிகளை வீட்டுக்கு வரவழைப்பதுதான். வீட்டின் அளவைப் பொறுத்து ஒரு நாளோ ஒரு வாரமோ அதிகாரிகள் தங்கியிருந்து விழாவை சிறப்பிப்பார்கள். அந்த ஒரு வாரமும் தலைப்புச் செய்தி தீபாம்மாதான். ட்விட்டரில் நேஷனல் பிரபலங்கள் எல்லாம் தீபாவுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். ஓவர்நைட்டில் ஒபாமாதான். எனவே, இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் உடனே பயன்படுத்திக்கொள்ளுமாறு தீபாம்மாவை கேட்டுக்கொள்கிறோம்.

* இருபெரும் கட்சிகள் இணையும்போது நேஷனல் அளவில் என்ன, இன்டர்நேஷனல் அளவில் வெளிச்சம் கிடைக்கும். எனவே இந்தியாவின் மிகப் பெரிய இரு கட்சிகளான எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையையும் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா தி.மு.கவையும் இணைத்துவிடலாம். லட்சக்கணக்கான தொண்டர்கள் சூழ நடக்கும் இந்த வைபவத்தை ஒயிட் ஹவுஸே நேரலையில் பார்க்கும் வாய்ப்பு கூட இருக்கிறது.



* தொடர்ந்து மூன்று வாரங்களாக அரசியல் செய்வதால் கட்டாயம் களைத்திருப்பார். எனவே, திரும்பவும் ஒரு பிரேக் எடுத்துக்கொள்ளலாம். இந்த முறை முற்றிலுமாக காணாமல் போகாமல், டப்ஸ்மாஷ், ஸ்மூல் போன்ற ஆப்களைப் பயன்படுத்தி வைரல் வீடியோக்களை உருவாக்கலாம். முடிந்தால் ஷின் ஷானுக்கு டப்பிங்கூட கொடுக்கலாம். இந்த உலகம் நம்மளை உத்துப் பார்க்கணும். அவ்வளவுதான் மேட்டர்.

* தி.மு.க, அ.தி.மு.க கிளைகள், பா.ஜ.க, காங்கிரஸ் என எல்லாக் கட்சிகளின் பிரதிநிதிகளும் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். ஆனால், ஆயிரக்கணக்கான தொண்டர்களையுடைய எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை எதிலும் பங்கேற்பதில்லை. எனவே, பேரவையின் ஒரே ஒரு பிரதிநிதியான தீபாம்மா, இனிமேல் தொடர்ச்சியாக விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கவேண்டும். ஓங்குக உங்களின் குரல்!


* இந்த இடைத்தேர்தலில் சதி தீபாம்மாவை மட்டுமல்ல, விஷாலையும் பழி வாங்கியிருக்கிறது. ஏற்கெனவே கமலுக்கு எதிராக கண்டனங்கள், விஜய்க்கு எதிராக மிரட்டல்கள் என அரசியல் திசை மாறியிருக்கும் நிலையில், தீபா அவருக்கு ஆதரவளித்து அவர்களை ஒரே குடையின் கீழ் இணைக்கலாம். ஆதரவும் தரலாம். ஆனால், தீபாம்மா ஆதரவு அளிக்கும்படியான நிலை வந்தபிறகு கமல், விஜய், விஷால் போன்றவர்கள் எல்லாம் அரசியல் பக்கம் மூச்சுக்காற்றைக்கூட விடமாட்டார்கள் என்பதை நினைக்கும்போதுதான்... 

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");