[ad_1]





தினகரன் மீது உச்சகட்ட கொந்தளிப்பில் இருக்கிறது இளவரசி குடும்பம். ' கிருஷ்ணபிரியாவிடம் இருந்து இந்த வீடியோவை நான் பெறவில்லை' என தினகரன் கூற, ’வீடியோவைக் கொடுத்தது நாங்கள்தான்’  எனக் கொந்தளிக்கிறார் கிருஷ்ணபிரியா.


 


அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைபெற்ற வீடியோ காட்சி ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டார், தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல். இந்த வீடியோவால் தினகரனுக்கும் இளவரசி குடும்பத்துக்கும் இடையில் மோதல் மூண்டது. ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே, ' டி.டி.வியுடன் இருக்கும் வெற்றிவேலின் கீழ்த்தரமான செயல்' என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டார் இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா.  இதையடுத்து, பத்திரிகையாளர்களை சந்தித்தும் தினகரன் மீதான கோபத்தை வெளிப்படுத்தினார். தினகரன் பதில் குறித்து ஒரே ஒரு கேள்வியை கிருஷ்ணபிரியா முன்வைத்தோம். 

"உங்களிடமிருந்து ஜெயலலிதா சம்பந்தப்பட்ட வீடியோவை வாங்கவில்லை என்கிறாரே தினகரன்?""நான் மிகுந்த மனவேதனையுடனே ஊடகங்களைச் சந்தித்தேன். அப்போதும் வீடியோவை கொடுத்தது, 'நாங்கள்' என்றுதான் கூறினேனே தவிர 'நான்' என்று கூறவில்லை. பெங்களூரு சிறைக்குச் சின்னம்மா(சசிகலா) சென்றவுடன், ' அம்மாவின் (ஜெயலலிதாவின்) மரணத்துக்கு விசாரணை கமிஷனோ, சி.பி.ஐ விசாரணையோ அமைக்க வேண்டும்' என்று ஓ.பன்னீர்செல்வம் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், சின்னம்மாவை(சசிகலாவை) நான், எனது இளைய சகோதரி ஷகிலா, எனது இளைய சகோதரர் விவேக் ஆகிய மூவரும் சந்தித்தோம்.

அப்போது, ' அம்மாவின் (ஜெயலலிதா) மரணம் சம்பந்தமாக விசாரணை கமிஷனோ, வேறு எவ்விதமான விசாரணையோ அமைக்க வேண்டும் என்று பேசிவருகிறார்கள், அதனால் வீடியோவை ஒரு காப்பி எடுத்து தினகரனிடம் கொடுத்துவிடுங்கள். உரிய நேரத்தில் தேவைப்பட்டாலும் படலாம்' என்று சின்னம்மா எங்களிடம் கூறினார். எனவே, விவேக் அந்த வீடியோவை ஒரு காப்பி எடுத்து தினகரனிடம் கொடுத்தார். இதனால்தான், 'நாங்கள்' என்று நான் கூறியிருந்தேன். என் கையிலிருந்து வாங்கினார் என்று நான் கூறவேயில்லை. வேண்டுமானால் ஊடகத்தில் பதிவு செய்ததை மீண்டும் பார்த்துக்கொள்ளலாம்" என்றதோடு முடித்துக் கொண்டார் கிருஷ்ணபிரியா. உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");