[ad_1]





ஐடி ஊழியர்களை ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் வெளியேற்றிய வெரிசான் நிறுவனம் பொதுவெளியில் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என ஐடி ஊழியர்கள் சங்கத்தினர் தங்களது அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.




சென்னையில் ஒலிம்பியா டெக் பார்க் மற்றும் தரமணி ஆர்.எம்.எக்ஸ் வளாகங்களில் செயல்படும் வெரிஸான் நிறுவனம், கடந்த 12-ம் தேதி சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய கிளைகளிலிருந்து ஒரே நாளில் 993 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது. எந்தவித முன்னறிவிப்புமின்றி குண்டர்கள் துணையோடு ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியது. இப்படியோர் அதிரடியில் இறங்கும்போது, ஊழியர்களுக்கு ஏதாவது நேரலாம் என்பதற்காக ஆம்புலன்ஸ் வாகனங்களை வளாகத்தில் நிறுத்தியிருந்தது. வெரிஸானின் செயல்பாடுகளுக்கு எதிராகத் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் மனுகொடுத்தன ஐ.டி ஊழியர் சங்கங்கள். இதையடுத்து, இன்று மாலை 4 மணிக்குத் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் முதல்கட்ட பேச்சுவார்த்தைத் தொடங்கவிருக்கிறது. வெரிஸானைப் போலவே, மேலும் சில ஐ.டி நிறுவனங்களும் ஆட்குறைப்புத் திட்டத்தை சத்தமில்லாமல் அமல்படுத்தி வருகின்றன. நாளொன்றுக்கு இரண்டு பேர், மூன்று பேர் எனப் பணியிழந்து வருகின்றனர். 


இதுகுறித்து தொழிலாளர் நல ஆணையரிடம் ஐ.டி அண்ட் ஐ.டி.இ.எஸ் தொழிலாளர் சங்கத்தினர் புகார் அளித்து வெரிசான் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், வெரிசான் நிறுவனம் ’ஆள்குறைப்பு நடவடிக்கை என்ற ஒன்று நடக்கவே இல்லை’ என முற்றிலுமாக மறுத்துவிட்டது. இந்நிலையில் ஐ.டி அண்ட் ஐ.டி.இ.எஸ் தொழிலாளர் சங்கத்தினர் தங்களது அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இதுகுறித்து ஐ.டி அண்ட் ஐ.டி.இ.எஸ் தொழிலாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அழகுநம்பி வெல்கினிடம் பேசினோம். ”வெரிசான் நிறுவனத்தின் முன்னறிவிப்பு இல்லாத ஆள்குறைப்பு நடவடிக்கையை எதிர்த்து தொழிலாளர் நல ஆணையத்தில் கடந்த இரண்டு நாள்களில் இரண்டு பிரிவுகளின் கீழ் மனு அளித்துள்ளோம். ஐ.டி சட்டம் 1947 25F என்ற பிரிவுக்கு எதிராக நடந்துகொண்டதாக வெரிசான் நிறுவனம் மீது புகார் அளித்துள்ளோம். 993 ஊழியர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கும் மன உளைச்சலுக்கும் வெரிசான் பொது வெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் பணி இழந்த பணியாளர்கள் அத்தனை பேரையும் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்” என்றார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");