[ad_1]

Chennai: 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றிவாய்ப்புகுறித்து கட்சித் தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது, தேர்தல் பொறுப்பாளர்களிடம் பூத் வாரியாக ஓட்டு எண்ணிக்கையைக் கேட்டறிந்த அவர்கள், உளவுப்பிரிவு, நுண்ணறிவுப்பிரிவு கொடுத்த ரிப்போர்ட்டையும் அலசி ஆராய்ந்துள்ளனர். 


பரபரப்புக்கு இடையே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (21.12.2017) நடந்துமுடிந்துவிட்டது. 77.05 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இது, கடந்த தேர்தல்களைவிட கூடுதல் சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதை ஆளுங்கட்சியினர் தங்களுக்குச் சாதகமாகப் பார்க்கின்றனர். அதே நேரத்தில் தினகரன், மருதுகணேஷ் ஆகியோர் உற்சாகத்தில் உள்ளனர். வாக்குப்பதிவுக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கட்சித் தலைமை அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். 

வரும் 24-ம் தேதி, எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை அனுசரிப்பதுகுறித்து ஆலோசிக்கப்பட்டதாக வெளிப்படையாகத் தெரிவித்தாலும் உள்ளே, ஆர்.கே.நகர் தேர்தல்குறித்தே நீண்ட நேரம் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், பூத் வாரியாக ஓட்டுகளைக் கணக்குப்போட்டுள்ளனர். தேர்தல் பொறுப்பாளர்களிடமும் உண்மை நிலவரத்தைக் கேட்டறிந்துள்ளனர். அப்போது தேர்தல் பொறுப்பாளர்கள், 25,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதற்கு முன்பே, உளவுப்பிரிவு, நுண்ணறிவுப்பிரிவு கொடுத்த ரிப்போர்ட்டில், குறைந்த எண்ணிக்கையில் இரட்டை இலை வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளதாம். வெற்றி உறுதி என்ற தகவலால் அ.தி.மு.க-வினர் உற்சாகத்திலிருக்கின்றனர்.

கட்சித் தலைமை அலுவலகத்தில், எம்.ஜி.ஆரின் நினைவுநாள்குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்த பிறகு, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் சில முக்கிய நிர்வாகிகள் மட்டும் தனியாக ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது, கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், 'ஆர்.கே.நகரில் குக்கர் சத்தம் கேட்டுவிட்டால் என்ன செய்வது? என்ற கேள்வியை முன்வைத்துள்ளார். அவரது கேள்விக்கு யாரும் பதிலளிக்கவில்லை. அப்போது, இன்னொரு மூத்த நிர்வாகி, 'அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. நம்முடைய வெற்றி உறுதியாகிவிட்டது. அதனால்தான், வாக்குப்பதிவு நேரம் முடிந்தபிறகும் ஆர்வமாக மக்கள் வாக்களித்துள்ளனர். எல்லாம் தேர்தல் கவனிப்பே காரணம்' என்று சொல்லியிருக்கிறார்.

 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்குறித்து உளவுப்பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் கொடுத்த ரிப்போர்ட்டில், அதிர்ச்சித் தகவல்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆர்.கே.நகரில் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருந்த சில அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களுக்கு இரட்டை இலையைவிட குக்கருக்குத்தான் மறைமுகமாக வேலைசெய்துள்ளனர். அதனால், அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்த பூத்களில் உள்ள ஓட்டுகள் தி.மு.க-வுக்கும், தினகரனுக்கும் அதிக அளவில் விழுந்துள்ளன. மேலும், வாக்காளர்களைக் கவனிப்பதிலும் முறைகேடு நடந்துள்ளது. அவர்களின் பெயர்கள் விவரம் ரகசியமாக இன்னொரு ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டுள்ளதாம். 
85 சதவிகித வாக்காளர்களைக் கவனிக்க கட்சித் தலைமை உத்தரவிட்டும், 50 சதவிகித வாக்காளர்கள் மட்டுமே கவனிக்கப்பட்டுள்ளதாகவும் ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டுள்ளதாம். இதனால், மீதமுள்ள 30 சதவிகித கவனிப்பு எங்கே? என்ற கேள்வி கட்சித் தலைமை நிர்வாகிகளிடையே எழுந்துள்ளது.

அடுத்து, பல உள்ளடி வேலைகளும் தேர்தலில் நடந்திருப்பதை நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் ரிப்போர்ட்டில் குறிப்பிட்டுள்ளனர். வேட்பாளர்களுக்கும் மூத்த அமைச்சர் ஒருவருக்கும் ஆரம்பத்திலிருந்தே பிரச்னை இருந்துவந்துள்ளது. வேட்புமனு தாக்கலின்போது, பெயரளவுக்கு கைகோத்த அவர்கள் இருவரும், அதன்பிறகும் மனக்கசப்பில்தான் அந்த அமைச்சர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது ஆதரவாளர்களிடம், அமைச்சர் தரப்பிலிருந்து எப்படி பிரசாரம் செய்ய வேண்டும் என்ற தகவல் முன்கூட்டியே சொல்லப்பட்டுள்ளது.  அதனால், அவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்ட தேர்தல் பூத்களில் பெரும்பாலான ஓட்டுகள் குக்கர் சின்னத்திலேயே விழுந்துள்ளதாக  ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாம். அதனால், குறைந்த எண்ணிக்கையிலேயே இரட்டை இலை வெற்றிபெறும் என்று சொல்லப்பட்டுள்ளதாம். அடுத்து, ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள குறிப்பிட்ட சமுதாய ஓட்டுகளில், பெரும்பாலானவை குக்கர் சின்னத்தில் விழுந்துள்ளதாம். இவ்வாறு தேர்தலின் வாக்குப்பதிவை துல்லியமாகக் கணக்குப்போட்டு, ரிப்போர்ட் அனுப்பியுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. உளவுப்பிரிவின் ஒவ்வொரு பாயின்ட்டையும் பார்த்த பன்னீர்செல்வம், பழனிசாமி மற்றும் ஆளுங்கட்சியினருக்கு உள்ளுக்குள் உதறல் ஏற்பட்டுள்ளது.

தினகரன், மருதுகணேஷ் ஆகியோரின் முகங்கள் வெற்றிப்பிரகாசத்தில் மின்னுகின்றன. அவர்களின் ஆதரவாளர்களும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு டிசம்பர் 24-ம் தேதியின் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கின்றனர். எம்.ஜி.ஆரின் நினைவு நாளில் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட உள்ளது. அதனால், அன்றைய தினத்தில் ஆர்.கே.நகரின் வெற்றியை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதியில் சமர்ப்பிப்பதற்கான வேலையில் ஆளுங்கட்சியினர் இப்போதே ஈடுபட்டுவருகின்றனர்.


   
     
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");