[ad_1]



கடலில் எதிரிகளுக்கு உண்மையான ராட்சனாக வலம் வருபவன் நீர் மூழ்கிக் கப்பல்.  நீர்மூழ்கி கப்பலால்,  அறிவியல் முறைகளை பயன்படுத்தி நீருக்கு உள்ளேயே இருந்து ஏவுகணைகளை தாக்கவும் முடியும். ஒரு வேளை ,சில அறிவியல் விதிகளை தெரியாமல் பயன்படுத்தினால், அதே அறிவியலால் அழிவு நிச்சயம். 


எந்த மாதிரியான விதி என்று பின் பார்ப்போம். அதற்கு முன்  எப்படி நீருக்குள் மூழ்கிறது, வேலை செய்கிறது என்பதை அறிந்துகொள்வோம்.

ஆரம்பம் : 

1620ல் தொடங்கி, பலப்பல வளர்ச்சிகளை கண்டு முழு அந்தஸ்து பெற்றது முதல் உலகப் போரில் தான்.  சில மணி நேரம் மட்டும் மூழ்கக் கூடிய நிலையிலிருந்து 6 மாதங்கள் வரை நீருக்குள் இருக்கும் வரை தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது.

எப்படி மிதக்கிறது:

தற்போது 6ம் வகுப்பில் படித்த ஆர்க்கிமிடிஸ் தத்துவத்திற்கு வருவோம். தண்ணீரில் ஒரு பொருள் தன் எடையை விட அதிக எடையுடைய நீரை வெளியேற்றினால் மட்டுமே அப்பொருள் நீரில் மிதக்கும். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில்தான் கப்பல்கள் மிதக்கின்றன.

எடுத்துக்காட்டாக, ஒரு நாணயத்தை தண்ணீரில் தூக்கிப் போட்டால் அது உள்ளே மூழ்கி விடும். அதாவது அது எடைகேற்ப அளவான நீரை வெளியேற்ற வில்லை. அதனால் தான் மூழ்கி விடுகிறது. அதே போல் நீர்மூழ்கி கப்பல் வடிவம் எவ்வித மாற்றமுமின்றி நீரின் மேற்பரப்பில் மிதக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது. நீர்மூழ்கி கப்பல் என்றால், நீரில் மூழ்க வேண்டுமல்லவா ஆக, நீர் மூழ்கி கப்பலின் எடைய கூட்டினால், அதிக எடைகொண்ட நீரை வெளியேற்றாமல் நாணயத்தை போல் நீரில் மூழ்கும். 

ஆனால் எவ்வளவு மீட்டர் அல்லது அடிவரை மூழ்க வேண்டும் என்பதை முடிவு செய்ய நாம் சரளை தொட்டிகளை (Ballast tank) ஐ பயன்படுத்துகிறோம். இந்தத் தொட்டிகள் நீர் மூழ்கி கப்பல்களை சுற்றி வடிவமைக்கப்பட்டிருக்கும். இது காற்றால் நிரப்பப்பட்டிருக்கும். சுற்றி காற்று இருப்பதால் நீரில் மிதக்கும். காற்றைவெளியேற்றினால் அந்த இடத்தில் நீரானது நிரம்பும். இப்படி நிரம்பினால் எடை அதிகரிக்கும். நீரில் மூழ்க தொடங்கும். 

மேலும் forward trim tank & Rear trim tank மூலம் ஆழத்தின் அளவை  கூட்டவும் முடியும் , குறைக்கவும் முடியும்.  ஆழக்கட்டுப்பாட்டு தொட்டிகள் (Depth Control Tanks) இதைக் கண்காணிக்க பயன்படுகிறது.



இரு வாசிகள் : 

"6 மாசமா எப்படிப்பா தண்ணிக்குள்ளே இருக்க முடியும்? சுவாசிக்க ஆக்ஸிஜன் வேணாமா?" என்று கேட்டால், அறிவியலில் இதற்கும் பதில் உண்டு. இதற்கு நாம் 8ம் வகுப்பு படித்த மின்னாற் பகுப்பு (Electrolysis) பயன்படுத்தினால் போதும். இது நீரை(H20) இரண்டாக பிரிந்து ஹைட்ரஜனாகவும், ஆக்ஸிஜனாகவும் தருகிறது.

மேலும், கட்டுப்பாட்டு கருவி மூலம் தேவையில்லாத CO2 நீக்கப்படுகிறது. குடிப்பதற்கு, எதிர் சவ்வூடு பரவல் (Reverse osmosis) முறை பயன்படுத்தப்படுகிறது.

நொறுங்குமா ?:

பல அறிவியல் விதிகளில் Boyle's law முக்கியமானதாகும். அதாவது விதியின் மூலம் PV =K 

p என்பது அழுத்தம் (pressure)

 V என்பது கன அளவு(volume)

K என்பது மாறிலி (Constant).

P = 1/v. ஆக அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க கன அளவு குறையும்.  அழுத்தமானது கன அளவிற்கு எதிர்த்தகவில் (Inversly proportional )உள்ளது.

சில எடுத்துக்காட்டுகளுடன் விவாதிப்போம்.

1.ஒரு காற்று நிரப்பப்பட்ட பலூனை எடுத்துக்கொள்வோம். உங்கள் இரண்டு கையால் அதை அழுத்தும் போது கன அளவு குறையும்.  மேலும் அழுத்தத்திற்கு உட்படுத்தினால் அது வெடிக்கும். ஆக அழுத்தம் அதிகரித்தால் கன அளவு குறையும். இது நீர் மூழ்கி கப்பலுக்கும் பொருந்தும். நீருக்குள் செல்ல செல்ல அழுத்தம் அதிகரிக்கும். 

ஆகவே , ஒவ்வொரு நீர் மூழ்கி கப்பலுக்கும் Crash level point இருக்கும். அதற்கு மேல் அது பலூனை போல் சிதறி விடும். 

உதாரணமாக , Crash Level சுமார் 400 மீட்டர்  ஆழம்வரை தான் உள்ளே செல்ல முடியும் என்று வைத்துக்கொள்வோம். ஒரு வேளை அதற்கு மேல் 500, 600 மீட்டர் சென்று விட்டால் சுமார் தோராயமாக 20000 டன் அழுத்தத்தை கொடுக்கும். அதாவது ஒரு முட்டை மீது ஒரு லாரி ஏறி நிற்பது போல் என்று நினைத்து பாருங்கள். 

கப்பலின் பயன்படுத்தக் கூடிய வெளிப்புற உலோகத்தை பொறுத்தே இது கணக்கிடப்படுகிறது .எஃகு வை பயன்படுத்தினால் 4 Mpa வரையிலும்,Titanium பயன்பத்தினால் 10 mpa வரை தாங்க கூடும். ஆக, நீர்மூழ்கி கப்பலை பயன்படுத்துவதற்கு இது எவ்வளவு ஆழம் வரை செல்ல முடியும் என்பதை இது போன்ற அறிவியல் விதிகளை கணக்கில் எடுத்துக் கொண்டு தான் முடிவு செய்யப்படுகிறது


 

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");