[ad_1]
பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் ஆர்வத்தோடு இருப்பவர்களை மிகவும் ஈர்ப்பது, திட்டமிட்ட முதலீட்டுத் திட்டமாகும் (SIP). இந்தத் திட்டத்தில் கிடைக்கக்கூடிய குறிப்பிடத்தக்க முதிர்வுத்தொகையானது, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையளிப்பதாக உள்ளது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் முன் கவனிக்கவேண்டிய சில அம்சங்கள் இருக்கின்றன.
செயல்படுத்தப்படும் கால அளவு
நாம் பணத்தை முதலீடு செய்யவிருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டமானது எவ்வளவு ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டுவருகிறது என்பதை, முதலில் கணக்கில்கொள்ள வேண்டும். குறைந்தது ஆறு ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் திட்டமாகத் தேர்ந்தெடுப்பது நல்லது. புதிதாகத் தொடங்கப்பட்ட திட்டத்தில் நம்முடைய பணத்தை முழுமையாக முதலீடு செய்வது அவ்வளவு பாதுகாப்பு அல்ல.
நிறுவனங்கள் குறித்த பார்வை
திட்டமிட்ட முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் நம்முடைய தொகையானது, பல்வேறு நிறுவனங்களின் பங்குகளில் பிரித்து முதலீடு செய்யப்படும். அதனால் அந்தத் திட்டத்தின்படி முதலீடு செய்யப்படக்கூடிய நிறுவனங்களின் பட்டியலைப் பெற வேண்டும். அதன் பிறகு அந்த நிறுவனங்களின் கடந்தகாலச் செயல்பாடுகள், அவற்றின் நிதிநிலை நிலவரங்கள், முந்தைய காலாண்டுகளில் அந்த நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் எதிர்காலத் திட்டமிடல் போன்றவற்றை அந்தந்த நிறுவனங்களின் இணையதளங்கள் மற்றும் பங்குச்சந்தை நிலவரங்களை வைத்து ஆய்வுசெய்ய வேண்டும். இந்த ஆய்வில் நமக்கு திருப்திகரமான மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாக இது இருக்கும் என மனதுக்குத் தோன்றினால் மட்டுமே அதில் முதலீடு செய்ய வேண்டும். அப்படியில்லையெனில், அடுத்தடுத்த முதலீட்டுத் திட்டங்களை நாடுதல் நல்லது.
உங்களது எண்ணத்தைப் பகுத்தறிதல்
எஸ்.ஐ.பி திட்டத்தில் முதலீடு செய்யும் முன், பண முதலீட்டு விஷயத்தில் நீங்கள் பழைமைவாதியா அல்லது சராசரியானவரா அல்லது தீவிரத்தன்மைமிக்கவரா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில், இதில் உங்களது குணத்துக்கேற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்வுசெய்வதே சரியானதாக இருக்கும். உங்களுக்கு நீண்டகால இலக்கு இருக்குமெனில், ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கும் மேற்பட்ட முதலீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது சரியானதாக இருக்கும் அல்லது நீங்கள் அதிக ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கிறீர்கள் எனில், ஈக்விட்டி ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம். நீங்கள் சராசரியான முதலீட்டாளராக இருந்தால் டைவர்சிஃபைடு ஈக்விட்டி ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம். நீங்கள் தீவிரத்தன்மையுடன் லாபத்தை எதிர்நோக்கி முதலீடு செய்பவராக இருந்தால், அதிக ரிஸ்க்கும் அதற்கேற்ற அதிக பலனும் அளிக்கக்கூடிய மிட்கேப், ஸ்மால்கேப் முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
கட்டண விகிதம்
மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யும் முன், அந்தத் திட்டத்துக்காகச் செலவிடவேண்டிய சொத்து நிர்வகிப்புக் கட்டணம் குறித்த விவரங்களைக் கணக்கிட வேண்டும். நாம் முதலீடு செய்யக்கூடிய பணத்தை நிர்வகிப்பதற்காக குறிப்பிட்ட ஒரு தொகையும், முகவர் கட்டணம், பதிவுக்கட்டணம், விற்பனை மற்றும் ஊக்குவிப்புக் கட்டணம் எனப் பல்வேறு தொகைகளும் இதில் வசூலிக்கப்படுகின்றன. அந்தத் தொகை திட்டத்துக்குத் திட்டம் வேறுபடக்கூடியது. இந்தத் தொகையானது உங்களுடைய லாபத்திலிருந்து கழிக்கப்படுவதால், சில நேரம் இதுவே பெரிய இழப்பாக இருக்கக்கூடும். லாபம் வந்தாலும் இந்தத் தொகையால் அந்த லாபத்தை நம்மால் அனுபவிக்க இயலாமல் போகக்கூடும். பொதுவாக ஃபண்ட் தொகை பெரிதாக இருக்கும்போது இந்தச் செலவினத்தொகை சிறியதாக இருக்கக்கூடும். அதேபோல குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன்பே அந்த முதலீட்டைத் திரும்பப் பெறும் சூழல் வருமெனில், அதற்காக வசூலிக்கப்படும் அபராதக் கட்டணம் எவ்வளவு என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் கணக்கிட்டு, லாபகரமான மியூச்சுவல் ஃபண்ட்களைத் தேர்வுசெய்வது நலம்.
வருவாய்
குறிப்பிட்ட கால இடைவெளியில் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் கிடைக்கும் வருவாய் குறித்து ஆய்வுசெய்ய வேண்டும். இந்த வருவாயானது நிலைத்தன்மையுடையதாக இருக்காது என்றாலும், அந்தத் திட்டத்தின் தொடர்ச்சியான செயல்திறனை, வருவாயை ஒப்பீடு செய்துபார்ப்பதன் மூலம் தோராயமாக அந்தத் திட்டம் குறித்த முடிவுக்கு வர இயலும். அந்த முடிவு நம்பிக்கையளிப்பதாக இருந்தால்கூட அதில் முதலீடு செய்யலாம். ஆக, இப்படி பல்வேறு அம்சங்களையும் சீர்தூக்கிப் பார்த்த பிறகு முதலீடு செய்யும்போது, நமது சொத்து குறித்து தேவையற்றப் பதற்றத்தைக் குறைப்பதோடு எதிர்பார்த்த அளவையொட்டிய லாபத்தையும் ஈட்ட முடியும். இதைத்தான் `எண்ணித்துணிகக் கருமம்' என்று திருவள்ளுவரே கூறியிருக்கிறார்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
திட்டமிட்ட முதலீட்டுத் திட்டத்தில் (SIP) இணையுமுன் கவனிக்கவேண்டிய 5 விஷயங்கள்!
TAGS :
COMMENTS