[ad_1]



பிரிக்க முடியாதது எதுவோ? என்று திருவிளையாடல் பாணியில் கேள்வி கேட்டால், குழந்தைகளும் தொலைக்காட்சியும் என்றே பலரின் பதிலாக இருக்கும். பள்ளியிலிருந்து வந்தவுடனே தொலைக்காட்சியின் முன் அமர்ந்துவிடுகிறார்கள் குழந்தைகள். பெரும்பாலும் கார்ட்டூன் சேனல்களைத்தான் பார்க்கிறார்கள். அவர்களின் தற்போதைய ஃபேவரைட் கேரக்டர் ஷின் சான். ஷின் சான் பிறந்தது அதாவது உருவாக்கப்பட்டது ஜப்பானில். கதையை எழுதியவர் யொஷிட்டோ உசுயி.




நவீனமடைந்த அனிமேஷன் உருவங்களின் தத்ரூபமானது அல்ல ஷின் சான் உருவம். பென்சில் ஓவியங்களைப் போல வரையப்பட்டவர்கள்தாம். ஆனால், ஒரு நொடியும் அமைதியாக இருக்காமல் துறுதுறுவென இருக்கும் அந்தக் குணம் குழந்தைகளையும் மட்டுமல்ல பெரியவர்களையும் ஈர்த்துவிடுகிறது. இதற்குக் காரணம் 1990 -ஆம் ஆண்டு இளைஞர்களுக்கான பத்திரிகைகாக உருவாக்கப்பட்டது என்பதால் என்னவோ பெரியவர்கள் பேசும் விஷயங்களையும் பகடியோடு ஷின் சான் பேசுவான். பள்ளியில் படிக்கும் ஷின் சான் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களைத் தன் குறும்பால் தெறிக்க விடுவான். வீட்டில் அவனின் அம்மாவைத் தொல்லை செய்வதுதான் முழுநேர வேலை. வித விதமான உணவுகளைப் பார்த்ததுமே, அதைச் சாப்பிட வேண்டும் எனும் ஆவலை ஷின் சானால் அடக்கவே முடியாது. இதுபோல, ஷின் சானைச் சுற்றியே காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

ஷின் சான் தொலைக்காட்சி தொடர் இவ்வளவு ஹிட் ஆவதற்கு, அதன் மற்ற கதாபாத்திரங்களும் முக்கியக் காரணம். அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வோமா? 



மிட்ஸி: ஷின் சானின் அம்மா. ஷாப்பிங் செய்வதென்றால் நேரம் செல்வதே மிட்ஸிக்குத் தெரியாது. சில நேரங்களில் சிக்கனமாக இருப்பதற்கு மிட்ஸி செய்யும் செயல்கள், பெரிய செலவை இழுத்துவிடும். ஷின் சானைச் சமாளிப்பதற்கு ஒவ்வொரு நாளும் கடும் போராட்டத்தைச் சந்திப்பவர். மிட்ஸி வெளியே செல்லும்போது வீட்டைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும்படி ஷின் சானிடம் சொல்லிவிட்டு செல்வார். ஆனால், திரும்ப வந்துபார்க்கும்போது வீடே அலங்கோலமாகி விடும். ஏதேனும் கேக் ஒன்றைச் சாப்பிட்டுக்கொண்டு ஹாயா டிவி பார்த்துக்கொண்டிருப்பான் ஷின் சான். அதைப் பார்த்து ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்றுவிடுவார் மிட்ஸி. இந்தச் சூழல் பல எபிசோடுகளில் நாம் பார்க்க முடியும். ஆனாலும் நமக்கு அலுப்பைத் தராத அளவுக்குக் காட்சிகளும் வசனங்களும் அமைக்கப்பட்டிருக்கும். 



ஹிரோ: ஷின் சானின் அப்பா. அலுவலகத்தில் வேலை பார்த்துவிட்டு சோர்வாக வருபவரிடம் ஷின் சானின் குறும்புகள் செம ரகளையாக இருக்கும். அப்பாவின் சில செய்கைகளை அம்மாவிடம் காட்டிக்கொடுத்துவிடுவேன் என மிரட்டியதும், வேறு வழியில்லாமல் ஷின் சான் கேட்பதை வாங்கிக்கொடுப்பார். மனைவி மிட்ஸி செய்யும் மோசமான சமையலைச் சகித்துக்கொள்ள முடியாமல் சாப்பிடுவதும், ஷாப்பிங் செல்லும்போது பொறுமையிழந்து கத்துவதுமாக நடுத்தரக் குடும்பத் தலைவரின் பிரதிபலிப்பாக ஹிரோ விளங்குவார். 



ஹிமாவாரி: ஷின் சானின் ஆசைத் தங்கை. இன்னும் ஒழுங்காகப் பேச வரவில்லை. அதனால், அவள் பேசுவதற்கு இவர்களாகவே ஓர் அர்த்தம் கொடுத்து விடுவார்கள். தன் தங்கையைக் கவனித்துகொள்ளும் பொறுப்பை ஷின் சான் ஏற்கும்போதெல்லாம் அதில் சொதப்பி, அம்மா, அப்பாவிடம் திட்டு வாங்கிக்கொள்வது வாடிக்கை. டைனிங் டேபிளில் ஷின் சானின் உணவைப் பகிர்ந்துகொள்பவள். ஆனால், அண்ணன் ஏதேனும் தவறு செய்யும்போது சத்தம் எழுப்பிக் காட்டிக்கொடுப்பவள்.



ஷிரோ: ஷின்சான் ஆசையாக வளர்க்கும் நாய்க்குட்டி. ஷிரோவுக்கு எனத் தனியான குடில் ஒன்று உள்ளது. அங்குதான் ஷின் சானோடு அது விளையாடும். ஷிரோவுக்கு உணவு வைப்பதும் ஷின் சான்தான். தன் நண்பர்கள் வரும்போது ஷிரோ செய்யும் சேட்டைகளால் கோபமாகும் ஷின்சான், அவர்கள் சென்ற பிறகு, மீண்டும் சமாதானமாகி விடுவான். ஷின்சானின் அதிரடியான சில செயல்களால் பாதிக்கப்படுவதில் முதல் ஆள் ஷிரோதான்.



இவர்கள் தவிர, நேனி எனும் பள்ளித் தோழி. கசாமா, மசாவு உள்ளிட்ட நண்பர்கள் எல்லோரும் சேர்ந்துதான் ஷின் சானின் உலகம். இவர்களே உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளைப் பல்வேறு மொழிகளில் பேசி, மகிழ்வித்து வருகிறார்கள். 


அதெல்லாம் சரி, ஷின் சான் குடும்பம் பற்றி நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற கேள்வி வருகிறதா... குழந்தைகளோடு நாம் நெருங்கிப் பழக, அவர்களின் மனநிலை உணர்ந்துகொள்ள இதுவும் அவசியம் அல்லவா!
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");