[ad_1]
Kanniyakumari: கன்னியாகுமரி மாவட்டம், கட்டடத் தொழிலில் முன்னணியில் இருந்துவருகிறது. பாலப் பணிகள், நான்கு வழி சாலைப் பணிகள், கட்டுமானப் பணிகளுக்கான மணல் தேவையை வெளிமாவட்டங்களில் நடந்துவந்த மணல் குவாரிகள் பூர்த்திசெய்துவந்தன. இந்த நிலையில், இந்தக் குவாரிகள் படிப்படியாக மூடப்பட்டன. இதனால், கட்டடப் பணிகளுக்கு பாறைகளை உடைத்து உருவாக்கப்படும் எம்சாண்ட் மணல் பயன்படுத்தப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அதிக அளவு எம்சாண்ட் மணல் கேரளாவுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. தற்போது எம்சாண்ட் மணலில் தரமில்லாதவை கட்டடப் பணிகளுக்கு வருவதால், மீண்டும் ஆற்று மணலை கட்டடப் பணிகளுக்குப் பயன்படுத்த அனைவரும் விரும்புகின்றனர் .
கன்னியாகுமரி மாவட்ட ஆறுகளான மேற்குத்தொடர்ச்சி மலை கோதையாறு மற்றும் பரளியாறு, கடந்த சில ஆண்டுகளாகப் பருவமழை பெய்யாததால் வறண்டு காணப்பட்டன. இந்த ஆண்டு அதிகமான மழை பெய்ததால், இரண்டு ஆறுகளிலும் வெள்ளம் அதிகமாக வந்ததால் மணல் அடித்துவரப்பட்டு ஆற்றுப்படுகைகளிலும், பாலங்களின் தடுப்பணைகளிலும், குடிநீர் உறைகிணறுகளைச் சுற்றியும் மணல் குவிந்து காணப்படுகின்றன. இந்த மணல், சாக்குமூட்டைகளில் கடத்தப்பட்டுவருகிறது. மணல் கடத்தலைத் தடுக்க வேண்டும் என மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கைவைத்துவருகின்றனர் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
கன்னியாகுமரி ஆற்றுப்படுகையில் மணல் கொள்ளை | Sand robbery at Kanyakumari river
TAGS :
COMMENTS