[ad_1]






Madurai: 

மலேசிய மணல் தொடர்பான பொதுநல வழக்கு ஒன்றை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி மகாதேவன் விசாரித்தார். அப்போது பொதுநலனைக் கருத்தில் கொண்டு கிரானைட் குவாரிகள் மற்றும் பிற கனிம குவாரிகளைப் படிப்படியாக மூட வேண்டும், மணல் தேவைக்கு வெளிநாடுகளிலிருந்து மணல் இறக்குமதி செய்ய வேண்டும் எனக் கடந்த நவம்பர் 29-ல் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தனர். அதில், ``ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனியாகக் கனிமவளச்சட்டம் உள்ளது. இந்தச் சட்டத்தின் உரிய அனுமதி பெறாமல் மணலைச் சேமித்து வைப்பதும், விற்பனை செய்வதும் குற்றமாகும். இதை மீறுவோர் மீது தமிழக கனிமவள பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. இந்த அதிகாரத்தின் அடிப்படையிலேயே வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலைப் போக்குவரத்து உரிமம் பெறாமல் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது.வெளிநாட்டு மணலை விற்கவும் வெளியே எடுத்துச் செல்லவும் அனுமதி கோரிதான் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரர் கோரிக்கை விடுக்காத நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூடுவதற்கும் உத்தரவிட்டு, புதிதாக மணல் குவாரிகளைத் திறக்கவும் தடை விதித்துள்ளார். அந்த உத்தரவை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், தமிழகத்தில் தற்போது மணல் விற்பனை ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. மேலும், அதைக் கண்காணிக்கச் சிறப்புக் கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், கடந்த 4 மாதங்களாகத் தமிழகத்தில் சட்ட விரோத மணல் கடத்தல் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் இறக்குமதி செய்யப்பட்ட மணலானாலும் மாநில விதிகளுக்கு உட்பட வேண்டும்" எனத் தெரிவித்தார். இந்நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");