[ad_1]
சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் நீலிமலை, அப்பச்சிமேடு, சரங்குத்தி வழியாகத்தான் செல்லவேண்டும். இதுவே முறையான பாதை என்று சொல்லப்படுகிறது. வரிசையில் காத்திருந்து பதினெட்டுப் படிகளைக் கடந்து சுவாமி ஐயப்பனை தரிசிப்பதுதான் சிறந்தது. சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் பொறுப்பு உணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும். செல்லும் வழியைச் சுத்தமாக வைத்திருப்பது பக்தர்களின் கடமை. எக்காரணம் கொண்டும் பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டுவரவேண்டாம் என்று தேவஸ்தானம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அறிமுகமில்லாத நபர்களிடம் பணம் தந்து ஏமாறாமல் விழிப்புஉணர்வுடன் இருப்பதும் பக்தர்களின் கடமைதான். எந்த ஒரு அவசர உதவிக்கும் அருகில் இருக்கும் காவல்துறையினரின் உதவியை நாடலாம். வயதானவர்களைத் தூக்கிச் செல்லும் டோலி போன்ற வசதிகளுக்கு நேரடியாக தேவசம் போர்டில் கட்டணம் செலுத்திப் பயன்படுத்திக்கொள்ளலாமே தவிர, இடைத்தரகர்களை நம்பி ஏமாறவேண்டாம். பாதுகாப்பு கருதி சோதனையிடும் காவலர்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டியது தம்முடைய கடமை என்பதை உணர்ந்து பக்தர்கள் நடந்துகொள்ளவேண்டும். எக்காரணம் கொண்டும் அன்னதான உணவை வீணாக்கவேண்டாம். பக்தர்களின் நன்மையைக் கருதி தேவசம் போர்டு ஏற்பாடு செய்துள்ள மருத்துவ வசதிகளைத் தயக்கமின்றி பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் பக்தர்களின் வசதிக்காக தேவசம் போர்டு பல ஏற்பாடுகளைச் செய்துள்ளது. தேவசம் போர்டு ஏற்பாடு செய்துள்ள வசதிகளை முறைப்படி பயன்படுத்திக்கொண்டு, நம்முடைய சபரிமலை யாத்திரையை இனிமையானதாக அமைத்துக்கொள்ளலாம். கார்த்திகை மாதம் பிறந்துவிட்டாலே, மண்டல பூஜைக்கும் மகர ஜோதிக்கும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் சபரிமலையில், பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் செய்திருக்கும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் குறித்த தகவல்களை பக்தர்களின் கவனத்துக்காக இங்கே கொடுத்திருக்கிறோம்.
உச்சகட்டப் பாதுகாப்பில் சபரிமலை சந்நிதானம்.
பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால், பக்தர்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக சபரிமலை தேவஸ்தானம் சார்பில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பில் எந்தவித குறைபாடும் உண்டாகிவிடக் கூடாது என்று கருதி, சபரிமலை முழுதும் மத்திய அதிவிரைவுப்படை மற்றும் கேரள அரசின் காவல்துறையினரால் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது. பக்தர்களின் பொருள்களைப் பரிசோதிக்க ஸ்கேனிங் வசதி, வெடிகுண்டு கண்காணிப்புப் பிரிவு போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், மீட்புப் படையினரும் சபரிமலையில் குவிக்கப்பட்டுள்ளனர். வனப்பகுதி முழுமையும் ஹெலிகாப்டர்களால் கண்காணிக்கப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. மேலும் சபரிமலை சந்நிதானத்தில் அமைக்கப்பட்ட தேவையற்ற கட்டுமானங்கள் அகற்றப்பட்டு நெரிசல் தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்னங்கன்றை நடுவதற்குப் பணம் தர வேண்டாம்.
18 ஆண்டுகள் சபரிமலைக்குச் செல்பவர்களை, ‘குருசாமி’ என்று அழைத்து வணங்குவது மரபு. 18-ம் ஆண்டு சபரிமலைக்குச் செல்பவர்கள், சபரிமலையில் சந்நிதானத்துக்குப் பின்புறம் இருக்கும் பஸ்மக் குளம் அருகே ஒரு தென்னங்கன்றை நடுவது வழக்கம். விழாக்காலங்களில் அதிக அளவு தென்னங்கன்றுகள் குவிவதால் அவை உடனுக்குடன் கோயில் நிர்வாகத்தால் அகற்றப்படுகிறது. இதைக் காரணமாகச் சொல்லி தென்னங்கன்றினை பூஜித்து நிரந்தரமாக வளர்க்க ஏற்பாடு செய்கிறோம் என்று கூறி சிலர் பக்தர்களிடம் பணம் வசூலித்து ஏமாற்றி வருகின்றனர். கூட்டம் அதிகமான நேரங்களில் 1000 ரூபாய் வரை இதற்கு வாங்கி விடுகின்றனர். இந்த மோசடியை பக்தர்கள் சுட்டிக்காட்டியதால் இந்த ஆண்டு முதல் தென்னங்கன்றை நட எந்தவித கட்டணமும் யாரிடமும் கொடுக்க வேண்டாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சபரிமலையில் அன்னதானம்...
மண்டலபூஜைகளில் கலந்துகொள்ள வரும் பக்தர்களின் தேவைக்காக திருவிதாங்கூர் தேவசம்போர்டு அன்னதானத்தை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு நவம்பர் 16-ம் தேதி தொடங்கிய இந்த அன்னதானத் திட்டத்தில் முதல் பதினைந்து நாள்களிலேயே மூன்று லட்சத்துக்கும் மேலானவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. மாளிகைப்புரத்தம்மன் சந்நிதி அருகே அமைந்துள்ள பிரம்மாண்ட உணவுக்கூடத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த அன்னதானத் திட்டத்துக்காக ஆயிரம் ரூபாய்க்கு மேலாக நன்கொடை தரும் பக்தர்களுக்கு ஐயப்பனை தரிசிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை பக்தர்களுக்கு தென்னிந்தியா முழுவதிலுமிருந்து 223 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது. அதன்படி தமிழகம் , ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவிலிருந்து புறப்படும் விசேஷ ரயில்களின் விவரங்களை தெற்கு ரயில்வே தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
சபரிமலை சந்நிதானம் செல்லும் பக்தர்களுக்கான விசேஷ பிரசாதமே அரவணைப்பாயசமும், அப்பமும்தான். கூட்ட நேரத்தில் பிரசாதம் வாங்குவது பெரும் சிரமமாக இருப்பதால் இந்த ஆண்டு பிரசாதம் வழங்கும் இடங்களை அதிகப்படுத்தி உள்ளது தேவஸ்தானம். பதினெட்டாம் படியருகே இடப்புறம் மட்டுமே பிரசாதங்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மாளிகைப்புரம் சந்நிதி அருகேயும் பிரசாதங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக அதிக அளவு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்ததுடன், குறிப்பாக பம்பையிலிருந்து வாகனங்களை நிறுத்தி வைக்கும் இடமான நிலக்கல் வரை செல்ல மினி பேருந்துகளை கேரள அரசு இயக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
சபரிமலையில் தங்கியிருக்க பக்தர்களுக்கென சந்நிதானத்தால் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ரூபாய் 250 முதல் 2,200 வரை வசதியைப் பொறுத்து அறைகள் உள்ளன. 12 மணிநேரம் அல்லது 16 மணிநேரம் வரை அறையை எடுத்துக்கொள்ளலாம்.
சபரிமலை செல்லும் பக்தர்களின் மருத்துவ உதவிக்காக அவசர எண்களை சந்நிதானம் அறிவித்துள்ளது. அப்பாச்சிமேடு 04735-202050 ; நீலிமலை 04735-203384 ; சபரிமலை சந்நிதானம் 04735 - 202101; பம்பை 04735 - 203318;
25 ருபாய் செலுத்தி நெய் விளக்கிடும் பூஜை தொடங்கி சபரிமலையில் 57 விதமான பூஜைகள் நடைமுறையில் உள்ளன. அதிக பட்சமாக படிபூஜைக்கு 75,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அவரவர் வசதிக்கு ஏற்ப சபரிமலை ஐயப்பனுக்கு விசேஷ பூஜைகளைச் செய்து மகிழலாம். இணையதளம் வழியாகவும் இந்தப் பூஜைகளுக்கு முன்பதிவு செய்யப்படுகிறது.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
சபரிமலையில் சிறப்புப் பூஜைகள், படி பூஜை, சிறப்பு தரிசனம்.. அவசியம் அறிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்! #Sabarimala
TAGS :
COMMENTS