[ad_1]



ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வரும் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் ஒவ்வொன்றும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தொகுதிக்குள் பணப்பட்டுவாடா நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்புப் பணியில் அதிக எண்ணிக்கையில் போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க., தி.மு.க., பி.ஜே.பி., நாம் தமிழர் போன்ற கட்சிகளோடு சுயேட்சையான டி.டி.வி தினகரனும் தீவிரமாகப் போட்டிபோட்டு வருகிறார். கட்சி உறுப்பினர்கள் தங்களது வேட்பாளருக்கு ஓட்டு சேகரிப்பதற்காக தெருத்தெருவாக ஆர்.கே.நகரை வலம் வருகிறார்கள். ஆர்.கே.நகர் மக்களுக்கு மிகவும் அறிமுகமான வேட்பாளர்களாக தி.மு.க-வைச் சேர்ந்த மருதுகணேஸும், அ.தி.மு.க-வைச் சேர்ந்த மதுசூதனனும் இருக்கிறார்கள். எனவே, களத்தில் நிற்கும் மற்ற வேட்பாளர்களுக்கு இவர்கள் கடும் போட்டியாக இருக்கிறார்கள். 

தேர்தல் என்றாலே, பணப்பட்டுவாடா இல்லாமல் இருக்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இருந்தாலும், அதனைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் பிரசாரத்தில் பல முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் புகார் மனு கொடுத்துள்ளார் பி.ஜே.பி மாநிலத் தலைவர் தமிழிசை.

அந்த மனுவில், 'தேர்தல் ஆணையம் வழங்கவேண்டிய பூத் சிலிப்களை அ.தி.மு.க., தி.முக-வைச் சேர்ந்த கட்சியினரும் டி.டி.வி.தினகரன் ஆட்களும் வழங்கிவருகிறார்கள். இப்படி அதிகார பலத்துடன் பல்வேறு முறைகேடுகளையும் இவர்கள் தொகுதிக்குள் நடத்தி வருகிறார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தானபோது, 'போட்டியிட்ட அரசியல் கட்சிகள் மக்களிடம் வாக்குகளைப் பெறுவதற்காக முறைகேடான வழிகளில் ஈடுபட்டார்கள். குறிப்பாக, தொகுதி மக்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது' எனக் காரணம் சொல்லியிருந்தது. இந்நிலையில், தமிழக அரசியல் காட்சிகள் அனைத்தும் அதிரடியாக மாற்றம் கண்டுள்ள இந்தச் சூழ்நிலையில், மறுபடியும் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நடைபெற்றுவருகிறது. முன்பைவிடவும் இப்போது களத்தில், கட்சிகளிடையே போட்டிகள் வலுத்துள்ளன. 'வாழ்வா சாவா' என்ற தீவிரப் போட்டி மனப்பான்மையில் தேர்தலை எதிர்கொள்வதால், தொகுதியில் தற்போதும் வாக்குகளைச் சேகரிக்கப் பல்வேறு வழிகளில், தில்லுமுல்லு வேலைகள் நடைபெற்றுவருவதாகத் தொடர்ச்சியானப் புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. இதில், 'பணப் பட்டுவாடா' பிரச்னை முக்கியமானது. இதுகுறித்து நம்மிடையே பேசிய பி.ஜே.பி வேட்பாளர் கரு நாகராஜன், ''தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் வேட்பாளர்களில் அ.தி.மு.க, தி.மு.க மற்றும் தினகரன் தரப்பினர் ஆர்.கே.நகரின் பல இடங்களில் முகாமிட்டு இருக்கிறார்கள். மாலை 5 மணிக்கு மேல் பிரசாரம் நடத்தக் கூடாது எனத் தேர்தல் ஆணையம் சொல்லியும் அதைச் சில கட்சிகள் பின்பற்றுவதே இல்லை. அங்கேயே தங்கி, அங்கிருப்பவர்களின் வீடுகளில் சமைத்துச் சாப்பிட்டு வருகிறார்கள். நாங்கள் புகார் அளித்ததால், வேட்டியில் இருந்தவர்கள், லுங்கிகளுக்கு மாறி அந்த ஏரியா ஆட்களாகவே வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். அங்கு நடக்கும் பணப்பட்டுவாடா தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துள்ளோம்" என்றார்.


மக்களுக்கு யார் மீது நம்பிக்கை இருக்கிறதோ அவர்கள்தான் நிச்சயம் ஜெயிப்பார்கள். போட்டி தீவிரமாக இருப்பதால், இந்த ஆண்டு பணப்பட்டுவாடா செய்ய அரசியல் கட்சிகள் நினைத்தாலும், மக்கள் அதை எதிர்பார்க்காமல், தங்களுடைய தொகுதிக்குச் சிறந்த தலைவரை தேர்ந்தெடுப்பார்கள் என்று நிச்சயம் நம்புவோம்!

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");