[ad_1]
ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே நடக்கும் பலப்பரீட்சைதாம் தேர்தல்கள். ஆனால், ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க-வைத் தாண்டி, அ.தி.மு.க-வுக்கும் டி.டி.வி.தினகரன் அணிக்கும் இடையில்தான் மல்லுக்கட்டு நடக்கிறது. இரட்டை இலைச் சின்னத்தை ஒருவழியாக பெற்றுவிட்டவர்கள், ஆர்.கே.நகரில் ஜெயிப்பதற்கான அனைத்து தில்லுமுல்லுகளையும் அரங்கேற்றி வருகிறார்கள். டி.டி.வி.தினகரனுக்குத் தொப்பி சின்னம் கிடைத்துவிடக் கூடாது என்பதில் தொடங்கி, நடிகர் விஷால் வேட்புமனு நிராகரிப்பு வரையில் காய்கள் நகர்த்தப்பட்டன. சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் வேட்பாளருக்கு போட்டியிடும் தொகுதியின் பத்து வாக்காளர்கள் முன்மொழிந்தால்தான் தேர்தலில் போட்டியிட முடியும். அப்படி பத்து பேர் முன்மொழிந்த விஷாலின் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்ட சுமதி, தீபன் ஆகியோர், 'எங்கள் கையெழுத்து இல்லை' எனச் சொல்ல... விஷால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியாக இருந்த வேலுசாமிமீது கடுமையான விமர்சனங்கள் எழுந்ததால் அவர் மாற்றப்பட்டார். வேலுசாமி நியாயமாக நடந்து கொண்டாரா? எனக் களமிறங்கியது ஜுனியர் விகடன். ஆர்.கே.நகரில் போட்டியிடும் வேட்பாளர்களில் சிலர் போட்டியிடுவதற்கான தகுதிகளைக்கூட பெறவில்லை என்கிற அதிர்ச்சி தகவல்கள் விகடன் புலனாய்வில் கிடைத்திருக்கிறது. தேர்தல் முடிந்தபிறகு யாராவது வழக்கு தொடர்ந்தால் தேர்தல் வெற்றியே செல்லாது என நீதிமன்றம் அறிவிக்க முடியும் என்கிற அளவுக்கு வேட்புமனு பரிசீலனையில் கோல்மால்கள் அரங்கேறியிருக்கின்றன. விகடன் நடத்திய புலனாய்வு கட்டுரை, நாளை வெளிவரும் ஜூனியர் விகடன் இதழில் வெளியாகிறது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
‘‘கோடம்பாக்கம் என்ற தொகுதியே இல்லை'' - ஆர்.கே. நகர் கோல்மால்கள் புலனாய்வு அறிக்கை நாளைய ஜூ.வி-ல் #RKNagarAtrocities
TAGS :
COMMENTS