[ad_1]
Chennai:
நேற்று, ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் பிரசாரத்துக்குச் சென்றபோது, பறக்கும்படையினரின் காரைப் பார்த்து எஸ்கேப் ஆன சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடக்கும் கேலிக்கூத்துகளுக்கு அளவே இல்லை. குறிப்பாக ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வில் சிலரது பிரசாரம் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஆர்.கே.நகர் பிரசாரத்துக்காக தினமும் பளிச் என கட்சிக் கரைவேட்டிகளுடன் வலம்வரும் அ.தி.மு.க-வினருக்குத் தொகுதியில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
வீடு, வீடாக ஓட்டு கேட்கச் செல்லும் மகளிரணியினரிடம், தொகுதி பெண்கள் 'அடிப்படை வசதிகள் இல்லை' என்று குறை கூறுகின்றனர். அதையெல்லாம் சரிசெய்து தருவதாக வாக்குறுதியளித்துவருகின்றனர் ஆளுங்கட்சித் தேர்தல் பொறுப்பாளர்கள். வேட்பாளர்கள், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பள்ளிவாசல்களுக்குச் சென்று ஓட்டுக்கேட்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அதன்படி, தொகுதியிலேயே பெரிய பள்ளிவாசலாகக் கருதப்படும் நேதாஜிநகர், பர்மா பள்ளிவாசலுக்கு அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன் நேற்று சென்றார். அவருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருவதாக இருந்தது. ஆனால், அவர்கள் இருவரும் நேற்றுவரவில்லை. மீனவர்களின் பிரச்னை தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் இருப்பதாகத் தேர்தல் பொறுப்பாளர்களுக்குத் தகவல்வந்தது. அதுபோல, பன்னீர்செல்வமும் அலுவல் காரணமாக பள்ளிவாசல் பிரசாரத்துக்கு வரவில்லை. இதனால் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, சம்பத் ஆகியோருடன் வேட்பாளர் மதுசூதனன், ஓட்டுகளைக் கேட்டார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வராததால், கட்சியினர் கடும் அதிருப்தியடைந்தனர். இந்தப் பள்ளிவாசலில் மட்டுமே 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் உள்ளன. இந்த ஓட்டுகளைப் பெற, தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ். டி.டி.வி.தினகரன் ஆகியோர் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, தினகரன் இந்தப் பள்ளிவாசலில் ஓட்டுகளைச் சேகரித்துள்ளார். மேலும், தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க-வினரிடையே கடும் குளறுபடி நிலவுகிறது. அதே நேரத்தில், 2000 பேர், குக்கர்களுடன் தொகுதி முழுவதும் தினகரன் ஆதரவாளர்கள் வலம்வந்தவண்ணம் உள்ளனர்.
அ.தி.மு.க வட்டாரங்கள் கூறுகையில், "தினகரன் தரப்பில் பணம் வாரி இறைக்கப்படுகிறது. இதனால், அவருக்கு தேர்தல் பிரசாரம் செய்ய கட்சியினரிடையே கடும் போட்டிநிலவுகிறது. ஆனால், மதுசூதனனின் பிரசாரத்தில் கணக்குப்பார்த்து பணம் செலவழிக்கப்படுகிறது. தாராளமாகப் பணம் செலவழிக்க வழிவகை இருந்தும் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டல், கழித்தல் கணக்குப்பார்க்கின்றனர். இதுவே, அ.தி.மு.க பிரசாரத்தில் தொய்வு ஏற்படுகிறது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வ.உ.சி நகர் பள்ளிவாசலுக்கு வந்து ஓட்டு சேகரித்தார். அதைவிட அதிக ஓட்டுகள் உள்ள பர்மா நகர் பள்ளிவாசலுக்கு முதல்வர், துணைமுதல்வர் வராதது எங்களுக்கு கடும் வருத்தம். கடைசி நேரத்தில் அமைச்சர்கள் தலைமையில் நாங்கள் அங்கு ஓட்டுகளைச் சேகரித்தோம்.
அடுத்து, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் சில அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. ஜெயலலிதா, தினகரன் தேர்தலில் போட்டியிட்டபோதுகூட அ.தி.மு.க-வினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஆனால், தற்போது நிலைமை முற்றிலும் மாறியிருக்கிறது. பெயரளவுக்கு பிரசாரம் செய்யப்படுகிறது. குறிப்பாக, தேர்தல் பொறுப்பாளர்களில் பலர், தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளின் வாகனத்தைக் கண்டாலே பயந்து நடுங்குகின்றனர். ஆர்.கே.நகர் தொகுதி பிரசாரத்துக்காக மூத்த அமைச்சர் ஒருவர் காரில் வந்தார். அவரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் வாகனம் பின்தொடர்ந்துள்ளது. இதைப்பார்த்த அந்த அமைச்சரை காரைவிட்டு இறங்கி, ஆட்டோவில் எஸ்கேப் ஆகியிருக்கிறார். அதோடு, அவரது காரும் மின்னல் வேகத்தில் பறந்துவிட்டது. இதுபோல பல சம்பவங்கள் தொகுதியில் நடக்கின்றன" என்றனர்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
“என்னது, பறக்கும்படையா?” - ஆட்டோவில் எஸ்கேப் ஆன அமைச்சர் #RKNagarAtrocities | Flying Sqaud
TAGS :
COMMENTS