[ad_1]

Chennai: ‘ஹாக்கி’ - இந்தியா ஆதிக்கம் செலுத்திய விளையாட்டு. உலகமே ஜொ்மனியைக் கண்டு நடுங்கிய வேளையில் இந்தியா இந்த விளையாட்டின் மூலம் ஹிட்லரைத் திகைக்கவைத்தது என்ற பெருமைமிகு பல நினைவுகள் ஹாக்கியுடன் இந்தியாவுக்கு இருக்கின்றன. ஆனால், காலமாற்றத்தால் இதன் வீச்சு இந்திய மக்களிடையே குறைந்துவிட்டது. அதற்கெல்லாம் ஈடுகட்டும்விதமாக தற்போது இந்திய ஹாக்கி அணி பல சாதனைகளை நிகழ்த்திவருகிறது. அதற்கு சாட்சிதான் அக்டோபரில் வென்ற ஆசியக்கோப்பை தங்கமும், இந்த மாதம் வென்ற உலக ஹாக்கி லீக் வெண்கலமும்!




ஐ.பி.எல் போட்டியில் சி.எஸ்.கே எப்படியோ அதே மாதிரிதான் ஆசியக்கோப்பையில் நம் இந்திய அணி. ஒன்று... கோப்பையை வெல்லும். இல்லையெனில், முதல் மூன்று இடங்களுக்குள் முன்னேறிவிடும். 2003, 2007 என தொடர்ச்சியாக இரு கோப்பைகளை வென்றாலும், அதன் பிறகு கோப்பையைத் தக்கவைக்கத் தவறிவிட்டது. ஆசியக்கோப்பையை வென்று பத்து வருடங்கள் ஆகிவிட்டதால், இந்த முறை நிச்சயம் கோப்பையை வெல்ல வேண்டும் என லட்சியத்துடன் களமிறங்கியது. அதற்கேற்றதுபோல் அணியில் சில விஷயங்கள் மாற்றம் செய்யப்பட்டன. அதில் முக்கியமானது, பயிற்சியாளராக நெதர்லாந்தைச் சோ்ந்த ஜோர்ட் மரினே நியமிக்கப்பட்டது. `இந்தியாவில் திறமைமிக்க பலர் இருக்கும்போது, ஏன் வெளிநாட்டவரைப் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும்?' என வழக்கம்போல் சா்ச்சைகள் எழுந்தன. அதற்கெல்லாம் பதிலடி தரும்விதமாக இந்த வெற்றிகள் அமைந்துள்ளன. 

ஆசியக்கோப்பையை வென்றவுடன் பயிற்சியாளர் மரினே, “ஆசியக்கோப்பை இந்தியாவுக்கு முக்கியமானது என்பது எனக்குத் தெரியும். ஆனால், நாங்கள் இன்னும் நீண்டதூரம் இந்தப் பாதையில் பயணிக்க வேண்டும். அதன் முடிவில் மகத்தான ஒரு நிகழ்வு காத்திருக்கிறது" என்று நம்பிக்கையுடன் கூறினார். அடுத்து நடந்த உலக ஹாக்கி லீக் தொடரில் வெண்கலம் வென்று சாதித்தார். பலம்வாய்ந்த பெல்ஜியம் அணியுடன் இந்திய அணி மோதியவிதம் அற்புதம்! சீனியர் வீரர்கள் அதிகம் இல்லாமல், பெரும்பாலும் ஜூனியர் அளவில் ஆடிய வீரர்களை வைத்துக்கொண்டே இதைச் சாதித்தது இந்திய அணி.



தடுப்பாட்டத்தைப் பொறுத்தவரை நமது அணியின் செயல்பாடு திருப்தியளிக்கும்விதமாகவே இருக்கிறது. வருண், சுரேந்திர குமார், ஹர்மன்ப்ரீத் சிங் என இளைஞா்கள் குழு சிறப்பாகச் செயல்படுகிறது. அவர்களின் வேகமும் உத்வேகமும் இந்திய அணிக்குப் புதிது. ஆசியக்கோப்பையில், பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும், மலேசியாவுக்கு எதிரான ஃபைனலிலும் இந்திய டிஃபண்டர்கள் மிகச்சிறப்பாக ஆடினார்கள். முக்கியமான போட்டிகளில் கோல் அடிப்பதைவிட, கோல் வாங்காமல் இருப்பதே வெற்றிக்கு முக்கியம். இந்திய அணி, அதில் மிகவும் ஜாக்கிரதையாக இருந்தது. கடைசி இரண்டு போட்டிகளிலும் ஒரு கோல்கூட விடாமல் `clean sheet' வைத்திருந்ததே வெற்றிக்கு மிக முக்கியக் காரணம். 

அதிலும் ஹர்மன்ப்ரீத், குறுகிய காலத்தில் இந்திய அணியின் ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றுள்ளார். பெனால்டி கார்னரில் அசத்தும் இவர், ஆசியக்கோப்பைத் தொடரில் ஏழு கோல் அடித்து, இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார். அந்தத் தொடரின் டாப் கோல் ஸ்கோரரும் இவரே! இந்திய அணியின் எதிர்காலம் என்று அனைவரும் புகழ்ந்து தள்ளுகிறார்கள். ஆனால், 2016 ஒலிம்பிக்கில் ஹர்மன்ப்ரீத் சொதப்பல் ஆட்டம் ஆடியவர். ஒருவேளை அந்தத் தொடருடனேயே அவரது வாழ்க்கை முடிந்திருக்கலாம். ஆனால், பயிற்சியாளர் மரினே, அவர்மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு வழங்கினார். இப்போது பட்டையைக் கிளப்புகிறார். இப்படிப்பட்ட இளம் வீரர்களை சரியான நேரத்தில் அடையாளம் கண்டு, வாய்ப்பு வழங்கியதுதான் இந்திய ஹாக்கி அணியை இப்போது முன்னேற்றப் பாதையில் பயணிக்கவைக்கிறது. 



இதைத் தவிர்த்து, இந்தியாவின் முன்கள வீரர்களும் முன்பைவிட துடிப்பாகச் செயல்படுகின்றனர். ஆகாஷ்தீப் மிகச் சிறப்பாக விளையாடிவருகிறார். இக்கட்டான நேரத்தில் இவரின் அனுபவம் மற்ற வீரர்களுக்கு உதவியாக இருக்கிறது. ஆனால், இதற்கு நோ்மாறாக `எங்களிடம் அனுபவமில்லையென்றால் என்ன... திறமை இருக்கிறது' என ரமன்தீப், சுனில் போன்றோர் எதிர் அணியின் `டிபென்ஸ்' மற்றும் 'ஸ்ட்ரைகிங் சா்க்கிளை' அடித்து நொறுக்குகின்றனர். 


இளமை, திறமை, அனுபவம் என அனைத்தும் கலந்த ஒரு `கம்ப்ளீட்' அணியாக மாறியுள்ளது இந்திய ஹாக்கி அணி. சில வருடங்களுக்கு முன்னால், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, ஜெர்மனி அணிகளிடம் மோதினால், இந்திய அணி சரண்டர் ஆகிவிடும். ஆனால், இப்போதெல்லாம் ஆட்டம் முழுவதும் போராடுகிறது. டை-பிரேக்கர் வரை ஆட்டத்தை எடுத்துச் செல்கிறது. அவ்வப்போது தோற்கடிக்கவும் செய்கிறது. ஆக, இந்திய ஹாக்கி சரியான கைகளில் இருக்கிறது; சரியான பாதையில் பயணிக்கிறது. இது தொடர்ந்தால், நாம் ஆட்சி செய்த ஒலிம்பிக் ஹாக்கி போடியத்தை மீண்டும் அடையலாம்... மீண்டும் ஆட்சி செய்யலாம்!
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");