[ad_1]
இந்தியப் பொருளாதாரம் குறித்து, இந்தியர்கள் மட்டுமல்ல உலக நாடுகளே சிந்திக்கும் ஆண்டாக 2017-ம் ஆண்டு அமைந்துவிட்டது. 2016-ம் ஆண்டு இறுதியில் எடுக்கப்பட்ட பணமதிப்பு இழப்பு நடவடிக்கையிலிருந்து முழுமையாக மீள்வதற்குள், ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்து `திரும்பவும் 2,000 ரூபாய் நோட்டு செல்லாதுன்னு சொல்லிடுவாங்களோ, 500 ரூபாய் நோட்டு அதிகமா மாத்தினவங்க அலுவலகத்துக்கு ரெய்டு வருவாங்களோ' என்றெல்லாம் இந்திய மக்களையும் சிறுதொழில்முனைவோர்களையும் பதற்றத்திலேயே வைத்திருந்த ஆண்டாகவே அமைந்தது `2017'. இந்த ஆண்டில் நிலவிய இந்தியப் பொருளாதாரத்தின் மொத்த நிலவரத்தின் தொகுப்பு... Rewind2017
பணமதிப்பு இழப்பும், ஜி.எஸ்.டி அமலாக்கமும் இந்தியத் தொழில் துறையில் குழப்பமான நிலையை ஏற்படுத்தியதால், உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சி அடிவாங்கி, ஜி.டி.பி மதிப்பானது 5.7 சதவிகிதம் என்ற அளவிலேயே கடந்த ஜூன் காலாண்டு வரை இருந்தது. இறுதியாக, செப்டம்பர் மாதத்தில் வெளியான ஜி.டி.பி விகிதத்தில் நம்பிக்கை துளிர்ப்பதுபோல 6.3 சதவிகிதம் என்ற ஏற்றத்தைக் கண்டது. இந்த வளர்ச்சியைப் பார்த்ததும் சிலர் இனி வேகமாக வளர்ச்சி அடையும் என்றும், வேறு சிலர் மெள்ள மெள்ள மேலேறும் என்றும் எதிர்பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். எப்படியோ, ஜி.டி.பி அளவானது இனி வீழாது என்ற நம்பிக்கை இரு தரப்பிலும் எழுந்துள்ளது.
ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டதும் ஆகஸ்ட் மாதத்தில் கிடைத்த வரிவசூல் போகப் போகக் குறைந்து, ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் டிசம்பர் மாதத்தில் 14 சதவிகிதம் என்ற அளவில் குறைந்துவிட்டது. ஆகஸ்ட் மாதத்தில் 94,063 கோடி ரூபாய் வசூலான ஜி.எஸ்.டி., டிசம்பர் மாதத்தில் 80,808 கோடி ரூபாயாகக் குறைந்தது. இந்த இழப்பானது, அரசின் நிதிப் பற்றாக்குறையை அதிகரித்து அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுப்பதாக உள்ளது. இந்தக் குறைவான ஜி.எஸ்.டி வசூல் போக்கானது, இன்னும் ஒரு காலாண்டுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி.எஸ்.டி-யிலிருந்து கிடைக்கும் மறைமுக வரி வசூல் குறைந்ததால், அதை சரிக்கட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் வருமானத்தின் மீது நேரடி வரிவிதிப்பை அதிகரிக்குமாறு வரித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. நேரடி மற்றும் மறைமுக வரிகளின் வசூலானது, இந்த ஆண்டில் சுமார் 8.5 - 9 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. மறைமுக வரி பற்றாக்குறையின் காரணமாக அடுத்த ஆண்டும் நேரடி வரிவசூல் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
ஜி.எஸ்.டி அறிமுகத்தால் உற்பத்தித் துறையிலும் பாதிப்பு ஏற்பட்டது. ஆண்டின் இறுதியில் சிறிதளவு முன்னேற்றத்தைப் பார்க்க முடிந்தது. எனினும், உற்பத்தித் துறையின் பல பிரிவுகளில் இன்னமும் செயல்பாடும் வேலைவாய்ப்பும் மோசமான நிலையில்தான் உள்ளன. பங்குச்சந்தை இந்த ஆண்டு இறக்கத்தில் இருந்தாலும் இனிவரும் ஆண்டுகளில் ஏற்றத்தை நோக்கியிருக்கும் என பங்குச்சந்தை நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பங்குச்சந்தை சமீபத்தில் 34,000 புள்ளிகளை எட்டியிருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டில் ஏற்றுமதித் துறை மேம்பட்டுள்ளது. தொழிலாளர்களின் பங்களிப்பு அதிகமுள்ள தொழிற்சாலைகளின் தயாரிப்புகளை அதிகளவில் ஏற்றுமதி செய்வதன்மூலம், தொழிலாளர்களுக்கு எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஊட்டுகிறது. ஜி.எஸ்.டி சிக்கல்கள் தீர்வு காணப்பட்டவுடன் மேலும்மேலும் முன்னேற்றமடையக்கூடும். கச்சா எண்ணெய் விலை உயர்வு கடுமையாக உள்ளது. இது அரசின் இறக்குமதி மசோதா மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. நிதிப் பற்றாக்குறையின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
இந்தச் சிக்கல்களையெல்லாம் தாண்டி அரசாங்கம் முன்னேறவேண்டுமானால், கிராமப்புற/விவசாய வருமானங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைக் கூட்டவேண்டுமானால், கிராமங்களில் உள்கட்டமைப்பை உயர்த்தி, கிராமப்புற மக்களின் நுகர்வை ஊக்கப்படுத்த வேண்டும். மத்திய அரசின் அடுத்த பட்ஜெட் இவற்றை மையப்படுத்தியிருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பை அதிகரிக்கும் முயற்சியில் இனிவரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் முக்கிய முயற்சிகளை அரசாங்கம் அமல்படுத்துவதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. வாராக் கடன் என்பது வங்கிகளுக்கு ஒரு சிக்கலாகவே இருக்கிறது. ஆர்.பி.ஐ வழிகாட்டுதலின்படி தனியார் வங்கிகளின் வாராக் கடன் என்பது குறைந்த அளவே இருக்கிறது. மாநில நிதி பெரும்பாலும் அழுத்தத்தின் கீழ் உள்ளது. குறிப்பாக, விவசாயக் கடன் வழங்கும் திட்டங்களால் பெரிதும் மாநில அரசுகளே பாதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக மாநில அரசுகள் பெரும் நிதிச்சுமையுடன் இருக்கின்றன. எனவே, விவசாயத் துறையில் புதிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. ஆக, இந்தியப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, 2017-ம் ஆண்டைவிட 2018-ம் ஆண்டு மிகச்சிறப்பான ஆண்டாக அமையக்கூடும் என எதிர்பார்க்கலாம்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ஜி.எஸ்.டி அறிமுகம் முதல் உற்பத்தி பாதிப்பு வரை... இந்தியப் பொருளாதாரத்தின் பிளஸ், மைனஸ்...! #Rewind2017
TAGS :
COMMENTS