[ad_1]
காலையில ரோட்டுல போகும்போது ஒரு நொடி, ஒரே ஒரு நொடி கொஞ்சம் நின்னு, உங்கள சுத்தி நடக்குற விஷயத்தையெல்லாம் எப்பவாவது கவனிச்சுருக்கீங்களா? ஆட்டோ ஓட்டுற அண்ணே, பூ விக்குற அக்கா, இளநீர் விக்கிற பெரியவரு, பேப்பர் போடுற தம்பி, பத்து பேரு சுத்தி நின்னாலும் அசால்ட்டா டீ ஆத்துற டீ மாஸ்டர், ஊர சுத்தமா வச்சுக்க தங்கள அழுக்கா ஆக்கிக்குற துப்புறவு தொழிலாளிங்க... திடீர்னு நாளைக்கே இவங்கல்லாம் அவங்களோட வேலைய செய்யாம போய்ட்டா? நெனச்சேபார்க்கமுடியாது, சத்தியமா இந்த உலகமே ஸ்தம்பிச்சுபோய்டும்! இப்படி இந்த சமுதாயம் தினமும் நிக்காம இயங்கிகிட்டே இருக்க ஆயிரமாயிரம் காலுங்க அயராம ஓடிக்கிட்டே இருக்குது, இதுதான் நிஜம்.
சின்னதா ஒரு எடுத்துக்காட்டு, தினமும் பிரெஷ்ஷா காய்கறி சமைச்சு சாப்பிட்றோமே, இந்த காய்கறி நம்ம தட்டுக்கு வர்றதுக்கு நமக்கு யாருன்னே தெரியாத மனுஷங்க எவ்வளவு பேரு மெனக்கெடறாங்கன்னு உங்களுக்குத் தெரியுமா? உங்க ஏரியாவுக்கு அருகாமையில இருக்குற பெரிய மார்க்கெட்டுக்கு காலங்காத்தால ஒரு 3 மணிக்குப்போய் பாருங்க, அப்பத் தெரியும். காக்கா குருவி கூட அசந்து தூங்குற அந்த நேரத்துலயும் சும்மா களகட்டிருக்கும் மார்க்கெட்டு. காய்கறி, பழம், பூ வுன்னு அன்னன்னைக்கி வியாபாரத்துக்காக வாங்கி வருவாங்க வியாபாரிங்க. இப்படி கண் விழிச்சு, உடல வருத்தி, வேர்வை வழிய உழைக்கிறதெல்லாம் அவங்களோட சொந்த நன்மைக்கு மட்டுந்தான் செய்றாங்கன்னு நாம சொன்னா, சத்தியமா அது அடுக்காதுங்க!
ஒரு பெரிய இயந்திரம் ஒழுங்கா செயல்படுறதுக்கு, அதுல இருக்குற ஒவ்வொரு பாகமும் ரொம்ப முக்கியம். ஆயிர வருஷமா ஆணி வேர் ஊனி நிக்குற ஆலமரமா இருந்தாலும், சல்லி வேர் இல்லைனா எப்போவோ சாஞ்சு போயிருக்கும். பறந்து விரிஞ்ச கட்டிடக் கூரையின்னாலும், அதைத் தாங்கி பிடிக்கிறதுக்கு, சின்னச்சின்னத் தூண்கள் வேணும். இப்படித்தாங்க இந்த உலகமும்... நாம கொஞ்சங்கூட சிந்திச்சுபார்க்க முடியாத அளவுக்கு இந்த சமுதாயத்தோட ஒவ்வொரு செயல்பாட்டையும் இயக்கிட்டு இருக்குறதே முகந்தெரியாத கோடிக்கணக்கான உழைப்பாளிகளோட காச்சுப்போன கைகள்தான்! நம்ம சமூகம் நிலைகுலைஞ்சு போகாம ஸ்திரமா வச்சிருக்கிறதே, மண்ணுல ஆழமா அழுந்தி நிக்குற இவங்களோட கால்கள்தான்! உலகத்தோட அன்றாடத்தேவை அப்படிங்கிற மிகப்பெரிய பாரம் நம்ம மேல சரிஞ்சு விழாம தாங்குறதே இவங்களோட கருத்த தோள்கள்தான்!
எது எப்படி இருந்தாலும், இன்னக்கி ரோலிங் சேர்ல உக்காந்து ஏ.சி ரூம்ல வேல பாத்துட்டு மாச சம்பளம் வாங்குறததான், 'நல்லா படிச்சு நல்ல நிலைமைக்கு வர்றதுன்னு' ஒரு டெம்ப்லேட்ட நாமளே நமக்கு வச்சிருக்கோம். எல்லாருமே இப்படி ஐயர்ன் பண்ண முழுக்கை சட்டைய போட்டுட்டு அலுவலுக்குத்தான் போமுடியுமா? அப்போ 'எல்லாரும் பல்லக்குல ஏற ஆசைப்பட்டா, பல்லக்க தூக்குறது யாரு?'ன்ற ஹைப்பொத்தெட்டிகல் கேள்விக்கு பதில்தான் என்னங்க? ஒரு குறிப்பிட்ட துறையில ஒருத்தர் எல்லாருக்கும் தெரியிற மாறி சாதிச்சா, அவரை தலையில தூக்கி வச்சு கொண்டாடுறோம், விருது கொடுக்குறோம். உண்மையிலேயே இப்படி சிலர்தான் நம்மளோட பாராட்டுதலுக்கு உரியவங்களா என்ன? இல்லவே இல்ல.
சுய விளம்பரமே இல்லாம, செய்யிற வேலைக்கு தகுந்த கூலியத் தவிர வேற எந்தப்பயனையும் எதிர்பார்க்காத, தினசரியா அவங்கவங்க வேலைய செம்மையா செய்யிற ஒவ்வொரு தொழிலாரும் கண்டிப்பா பாராட்டப்படவேண்டியவங்கதான்! இவங்களுக்கு நாம மேடையெல்லாம் போட்டு மெடலெல்லாம் கொடுக்கணும்னு அவசியமில்ல, கைமாறா செய்யவேண்டியது இவங்களுக்குன்னு சின்னதா ஒரு அங்கீகாரத்த கொடுக்குறதுதான்!
செய்யிற தொழில சிறப்பா செஞ்சா, நமக்கு ஒரு பாராட்டு கிடைக்கும் 'பெரிய வேலைக்காரன்யா அவன்'னு, அத கேக்கும்போது சும்மா ஜிவ்வுன்னு எங்கயிருந்தோ ஒரு தெம்பு வரும் பாருங்க, அத அடிச்சிக்க இந்த உலகத்துல வேற எதுவுமே இல்லைங்க! இதுமாரி உங்க வீட்டு அக்கம் பக்கத்துல, நீங்க தினமும் பாக்குற எத்தனையோ 'வேலைக்கார'ங்க இருப்பாங்க. அவங்ககிட்ட மனம்விட்டு ஒரு நிமிஷம் பேசுங்க, அவங்களப் பத்தித் தெரிஞ்சிக்குங்க. அவங்கள பேசவைச்சு வீடியோ எடுத்து உங்களோட பேஸ்புக், ட்விட்டர் கணக்குல #ProudVelaikkaran அப்டிங்ற ஹேஷ் டேக்கோட பதிவு செய்யுங்க. இது இந்த வேலைக்கார உடன்பிறப்புகளுக்காக நாம செய்யிற சின்ன கௌரவமா இருக்கட்டும். நீங்க செய்யிற வேலைய பெருமையா நெனச்சீங்கன்னா, தயங்காம உங்க வேலையப்பத்தி ஒரு வீடியோ எடுத்து , 'நான் ஒரு #ProudVelaikkaran' ன்னு போஸ்ட் போடுங்க!
இன்னும் என்ன யோசனை? இப்பவே, #ProudVelaikkaran-ன்னு உழைக்கும் வர்க்கத்தின் கதைகள இந்த உலகத்துக்கு சொல்லி, எல்லாரையும் உற்சாகப்படுத்துவோம்! வேலைக்காரன்னு சொல்லிக்கறதுல பெருமைப்படுவோம்! என்ன, வீடியோ எடுக்க ஃபோன எடுத்துட்டீங்க போல?!
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
நான் ஒரு "வேலைக்காரன்"ன்னு சொல்லிக்கிறதே தனி கெத்துதான்! #ProudVelaikkaran (Sponsored Content)
TAGS :
COMMENTS