[ad_1]
முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக ஐந்து அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை கோரிக்கை நடைபயணம் நடைபெற்றது. தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பிலிருந்து தொடங்கிய இந்த நடைபயணமானது நான்கு நாள்கள் நீடித்து தேனியை வந்தடையும். வழியில் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று மக்களின் ஆதரவு கோரப்படுகிறது. இறுதியாக தேனியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைபயணத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, தென்னிந்திய பார்வர்டு பிளாக்கின் நிறுவனத்தலைவர் திருமாறன்ஜி, கேரள வாழ் தமிழர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர். இன்று லோயர்கேம்பிலிருந்து தொடங்கிய நடைப்பயணம் கம்பம் வந்தடையும். நாளை கம்பத்திலிருந்து உத்தமபாளையம் வரும் நடைப்பயணத்தில் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு மாநிலத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் கலந்துகொள்வதாக திட்டமிடப்பட்டுள்ளது. நடைப்பயணத்தின் இறுதி நாளில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஐந்து கோரிக்கைகள் :
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் பேபி அணையை பலப்படுத்தி மெயின் அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பை தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். அணைக்குச் செல்லும் வல்லக்கடவு வனப்பாதையைத் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அணை அருகே உள்ள பொறியாளர்கள் குடியிருப்பிற்கு உடனே மின்சாரம் வழங்கிட வேண்டும். தேக்கடி ஆனவச்சாலில் வாகன நிறுத்தம் அமைக்கக் கூடாது. ஆகிய ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நடைபயணம் தொடங்கியது.
பிரதமர் வீட்டை முற்றுகையிடுவோம்.!
கோரிக்கை நடைப்பயணமானது தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பிலிருந்து தொடங்கியது. குறிப்பாக லோயர் கேப்பில் இருக்கும் கர்னல் ஜான் பென்னிகுவிக் மணி மண்டபத்திலிருந்து தொடங்கியது. அப்போது பேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, ‘உச்ச நீதிமன்றம் விதித்த தீர்ப்பை உடனே தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். பேபி அணையை பலப்படுத்தும் முயற்சியில் தமிழகப் பொதுப்பணித்துறை சுணக்கம் காட்டுகிறது. இது தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் பகுதி மக்களை வஞ்சிக்கும் செயல். ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்திற்கு பேருதவியாகவும் இருக்கும் முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உடனே 152 அடியாக உயர்த்த தமிழக அரசு தனது நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். மத்திய அரசு வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருக்காமல், உடனே முல்லைப்பெரியாறு விவகாரத்தில் தலையிட வேண்டும். இல்லையென்றால் விவசாயிகளை ஒன்றுதிரட்டி பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டை முற்றுகையிடுவோம்.” என்று ஆவேசமாகப் பேசினார்.
பேபி அணையை பலப்படுத்த ஏன் தாமதம் :
உச்சநீதிமன்ற தீர்ப்பில், மெயின் அணைக்கு அருகே இருக்கும் பேபி அணையை பலப்படுத்திவிட்டு அணையில் 152அடி தண்ணீர் தேக்கி வைத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு கேரளா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பேபி அணைக்கு அருகே இருக்கும் மரங்களை வெட்ட கேரள வனத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. மரங்களை வெட்டினால்தான் பேபி அணையை பலப்படுத்த முடியும் என்ற சூழலில் கேரள வனத்துறை முட்டுக்கட்டை போடுகிறது. அதே போல், கட்டுமானப்பொருள்களை கொண்டுவரும் வல்லக்கடவு சாலையைப் பராமரிக்காமல் வைத்துள்ளது கேரளா. அதற்கான அனுமதியையும் நம்மிடம் கொடுக்க மறுக்கிறது. இப்படி எல்லாவகையிலும் முட்டுக்கட்டை போடும் கேரள அரசைக்கண்டித்தும், கண்டுகொள்ளாமல் இருக்கும் தமிழக அரசையும், இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் மத்திய அரசைக் கண்டித்துமே இந்தக் கோரிக்கை நடைப்பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
முல்லைப்பெரியாறுக்காக பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிடுவோம்! - அய்யாக்கண்ணு ஆவேசம்.! | Prime Minister's house will siege!
TAGS :
COMMENTS