[ad_1]

Chennai: 

 


தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க அரசின் செயல்பாடுகளுக்கான உரைகல்லாகவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பார்க்கப்படுகிறது. முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, இரட்டை இலைச் சின்னத்தில் அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ், பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜன், சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன்,  நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இவர்களைத் தவிர, 54 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். களத்தில் பிரதான போட்டியாளர்கள் என்றால், இவர்கள் ஐந்து பேர்தான். இரட்டை இலைச் சின்னம் கைக்கு வந்த பிறகு நடக்கும் தேர்தல் என்பதால், வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க இருக்கிறது. 'அரசுக்கு எதிரான மனநிலையில் உள்ளவர்கள் தி.மு.கவுக்கு வாக்களிப்பார்கள்' என்ற நம்பிக்கையில் வேட்பாளர் மருது கணேஷ் பிரசாரம் செய்துவருகிறார். 'துரோகிகளுக்குப் பாடம் கற்பிப்போம்' என்ற முழக்கத்தோடு குக்கரை ஏந்தியபடி வலம் வந்து கொண்டிருக்கிறார் தினகரன். பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜனை ஆதரித்து வீடு வீடாக நடந்துகொண்டிருக்கிறார் தமிழிசை. நாம் தமிழர் வேட்பாளரின் வெற்றிக்காக ஆர்.கே.நகரிலேயே முகாமிட்டிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர்கள் போக ‘மிஸ்டர் கரன்சி’யும் இவர்களில் பலருடன் கூட்டணி வைத்து களம் காண்கிறார். அந்த ஆகாத கூட்டணி காரணமாகத்தான் ஏற்கெனவே ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இப்போது இரண்டாவது வாய்ப்பு. இப்போதும் சாதி, அதிகாரம், பணபலம், வன்முறை என்று பல காரணிகள் இந்த தேர்தல் முடிவைத் தீர்மானிக்கலாம் அல்லது தேர்தலை தள்ளிப் போகச் செய்யலாம். 

 

இடைத்தேர்தல் நடப்பதென்னவோ ஆர்.கே.நகரில்தான் என்றாலும், அதை தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் சூழ்நிலையை களமாகவேக் கருத வேண்டியிருக்கிறது. இந்நிலையில், நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், ஆர்.கே.நகரில் யார் ஜெயிக்க வேண்டும் அல்லது ஜெயிக்கக் கூடாது என்று எதிர்பார்க்கிறீர்கள்? ஒருவேளை ஆர்.கே. நகரில் உங்களுக்கு வாக்குரிமை இருந்தால் யாருக்கு நீங்கள் வாக்களிப்பீர்கள்...? ஒரு மிஸ்டு கால் மூலம் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்களேன். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலைப் பொறுத்தவரை உலகத் தமிழர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்று உலகத்துக்கும்...முக்கியமாக ஆர்.கே. நகர் மக்களுக்குமே உணர்த்துவோம்..! 

 



 


அ.தி.மு.கவின் மதுசூதனனுக்கு உங்கள் ஆதரவென்றால் 044-66808011 -க்கு மிஸ்டு கால் கொடுங்கள். 

 

தி.மு.கவின் மருது கணேஷுக்கு உங்கள் ஆதரவென்றால் 044-66808012 -க்கு மிஸ்டு கால் கொடுங்கள்.

 

சசிகலா அணியின் டி.டி.வி.தினகரனுக்கு உங்கள் ஆதரவென்றால் 044-66808013 -க்கு மிஸ்டு கால் கொடுங்கள். 

 

பா.ஜ.க-வின் கரு.நாகராஜனுக்கு உங்கள் ஆதரவென்றால் 044-66808014 -க்கு மிஸ்டு கால் கொடுங்கள். 

 

’நாம் தமிழர்’ கட்சியின் கலைக்கோட்டுதயத்துக்கு உங்கள் ஆதரவென்றால் 044-66808015 -க்கு மிஸ்டு கால் கொடுங்கள். 

 

பிற கட்சி அல்லது சுயேச்சைகளில் எவருக்கேனும் உங்கள் ஆதரவென்றால், 044-66808016 -க்கு மிஸ்டு கால் கொடுங்கள். 

 

NOTA (நோட்டா)-வுக்கு உங்கள் ஆதரவினைப் பதிவு செய்ய விரும்பினால் 044-66808017 -க்கு மிஸ்டு கால் கொடுங்கள்.  


 



 

சில குறிப்புகள்:

* இது மக்களின் மனநிலை உணர்த்தும் ஒரு பதிவே. 

* ஒரு அலைபேசி/தொலைபேசி/இணைப்பு மூலம் பதிவாகும் முதல் வாக்கு மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.   

* 18/12/17 - திங்கட்கிழமை மாலை வரையே மிஸ்டுகால் பதிவு செய்யப்படும்! 




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");