[ad_1]
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 2ஜி வழக்கில் தீர்ப்பு வெளியானது. 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி, ராசா உள்ளிட்ட அனைவரும் விடுதலைசெய்யப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தரப்பு தவறியதை அடுத்து, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் சற்றுநேரத்தில் 2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், எம்.பி., கனிமொழி தன் கணவர் அரவிந்தனுடன் நீதிமன்றத்துக்கு வந்தார். நீதிமன்ற வளாகத்தில் குவிந்த தி.மு.க தொண்டர்கள் வெளியேற்றப்பட்டனர். முன்னாள் அமைச்சர் அழகிரி, கருணாநிதியின் மனைவி ராஜாத்தியம்மாள், திருச்சி சிவா, துரைமுருகன் உள்ளிட்ட திமுக முக்கிய பிரமுகர்கள் நீதிமன்றத்தில் உள்ளனர். தீர்ப்பு வழங்கும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனியும் நீதிமன்றம் வந்தடைந்தார்.
கனிமொழி வீட்டில் கொண்டாட்டம்
2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க மாநிலங்களவை எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் வந்தடைந்தனர். சுப்பிரமணியன் சுவாமியும் நீதிமன்றம் வந்தடைந்தார். பாட்டியாலா நீதிமன்ற வளாகம் பரபரப்பாகக் காணப்படுகிறது. நீதிமன்ற வளாகத்தில் தி.மு.க தொண்டர்களும் குவிந்துள்ளனர். காலை 10.30 மணியளவில் தீர்ப்பு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Delhi: Former Telecom Minister A Raja arrives at Patiala House Court for #2GScamVerdict pic.twitter.com/weXfgfSeGJ
— ANI (@ANI) December 21, 2017
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தி.மு.க அங்கம் வகித்தபோது, மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தார் . அப்போது, மொபைல் போன் சேவைகளுக்கான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக, மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டினால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது. இதுகுறித்து சி.பி.ஐ வழக்குப்பதிவுசெய்து விசாரித்தது. இந்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி-யுமான கனிமொழி ஆகியோர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2ஜி வழக்கு தொடர்பான வாதங்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. நாட்டையே உலுக்கிய இவ்வழக்கு, இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. பல ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டுவந்த இவ்வழக்கின் தீர்ப்பு நாள், இன்று.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
#LiveUpdates 2ஜி தீர்ப்பு! - அனைவரும் விடுதலை #2GScamVerdict
TAGS :
COMMENTS