[ad_1]







கனிமொழி மற்றும் ஆ.ராசா  திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அப்போது மகள் கனிமொழி கன்னத்தில் கருணாநிதி முத்தமிட்டார். தன் கண்ணாடியை தன் கைகளாலேயே சரிசெய்தார். இந்தக் காட்சி அருகில் இருந்தவர்களையும் கண்கலங்கச் செய்தது. மற்றொரு தடவை கனிமொழியை அழைத்து கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டு, ஆசி வழங்கினார். 




Credits - SunTV
 

2ஜி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட கனிமொழி மற்றும் ஆ.ராசா டெல்லியிலிருந்து இன்று சென்னை வந்தடைந்தனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. கோபாலபுரம் இல்லத்தில் பறையாட்டம், கரகாட்டாம் எனக் களைகட்டியது. சென்னை விமானநிலையத்திலிருந்து கோபாலபுரம் வந்த கனிமொழி மற்றும் ஆ.ராசா திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனிடம் ஆசி பெற்றனர். கனிமொழி திமுக தலைவர் கருணாநிதி அருகில் சென்றதும் அவர் உற்சாகத்தில் மகளைப் பார்த்து சிரித்தார். தனக்கு அணிவித்த மாலையை கருணாநிதிக்கு அணிவித்து மகிழ்ந்தார். தன் தந்தையின் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டு கண்கலங்கினார். பதிலுக்குக் கருணாநிதியும் மகளின் கன்னத்தை அன்பாகக் கிள்ளி முத்தமிட்டு சிரித்தார் கருணாநிதி. உடல் நிலைக்குறைவால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்த கருணாநிதி மகளின் விடுதலையைத் தொடர்ந்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிவருகிறார். 
 

  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");