[ad_1]





Chennai: 

' நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் கேட்டால் கொடுங்கள்' என்ற உத்தரவாதத்தோடு கொடுக்கப்பட்ட வீடியோ பதிவை திட்டமிட்டே வெளியிட்டுவிட்டார் தினகரன் எனக் கொதிக்கின்றனர் இளவரசியின் குடும்பத்தினர். ' வெற்றிவேல் வீடியோ வெளியிட்டதற்கும் தினகரனுக்கும் சம்பந்தமில்லை என தினகரன் தரப்பினர் கூறினாலும், இந்த வீடியோவை தினகரனிடம் கொடுத்தது கிருஷ்ணபிரியாதான்' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். 


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர், சசிகலா குடும்பத்திலிருந்து கட்சிப் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டார் தினகரன். அதேநேரம், சமூகசேவையில் ஈடுபட்டிருந்த கிருஷ்ணபிரியாவும் அரசியலுக்கு வர விரும்பினார். நீட் எதிர்ப்புப் போராட்டம், மரக்கன்று நடுவது எனச் செயல்படத் தொடங்கினார். ஜெயலலிதாவைப் போலவே உடை, கண்ணாடி அணிவது என கிருஷ்ணபிரியாவின் செயல்பாடுகளை தினகரன் ரசிக்கவில்லை. ' குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் எல்லை மீறிச் செயல்படுகின்றனர். அவர்களை அமைதியாக இருக்கச் சொல்லுங்கள்' என சசிகலாவிடமே கூறினார். இதற்கு சசிகலா எந்தப் பதிலும் சொல்லாமல் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியானதைப் பார்த்து அதிர்ந்து போய் இருக்கிறார் கிருஷ்ணபிரியா. ' இப்படி ஏமாற்றிவிட்டாரே...நம்பித்தானே கொடுத்தேன். எந்தத் தொண்டனுக்கும் இப்படியொரு கோலத்தில் அம்மா இருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. என்னாலேயே ஒருமுறைக்கு மேல் பார்க்க முடியவில்லை. தேர்தல் வெற்றிக்காக இப்படியெல்லாம் செய்யலாமா?' எனக் கதறி அழுதிருக்கிறார். இதைப் பற்றி தினகரனிடம் போனில் கேட்டிருக்கிறார். அப்போது பேசிய தினகரன், ' ஆறுமுகசாமி கமிஷனில் கேட்டால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதில் நானும் உறுதியாக இருக்கிறேன். இப்படியொரு காட்சியை என்னுடைய அனுமதியில்லாமலேயே வெளியிட்டுவிட்டார்கள். அவர்களைக் கண்டிக்கிறேன்' என சமாதானம் செய்தும் கிருஷ்ணபிரியா ஏற்கவில்லை. 


" தினகரன் தரப்பினரின் செயல்பாடுகளுக்கு எதிராகப் பேசும் முடிவில் இருக்கிறார் கிருஷ்ணபிரியா. மக்கள் மத்தியில் ஜெயலலிதாவின் பிம்பத்தைக் கெடுக்கும் காரியங்கள் சமீபநாள்களாக நடந்து வருகிறது. இதைக் கண்டிக்கும் வகையில் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார் விவேக். இன்று அதே சசிகலா குடும்பத்திலிருந்து வீடியோ வெளியானதை இளவரசி குடும்பத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தினகரனின் அனுமதியில்லாமல் வெற்றிவேலால் இந்தக் காட்சிகளை வெளியிட முடியாது. திட்டமிட்டே தங்களுடைய சுயநலத்துக்காக வீடியோவை வெளியிட்டுவிட்டார்கள். இதற்கு எதிராக மீடியாக்களிடம் பேசவிருக்கிறார் கிருஷ்ணபிரியா. தினகரனுக்கும் இளவரசி குடும்பத்துக்கும் இடையிலான விரிசல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது" என்கின்றனர் இளவரசி குடும்பத்து உறவினர்கள்.  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்



!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");