[ad_1]



 ஜெயலலிதாவின் மரணம்குறித்து பல்வேறு சந்தேகங்கள் ஆரம்பத்திலிருந்தே வெளியாகின. துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணத்துக்கு நீதிகேட்டு தர்மயுத்தம் நடத்தினார். ஜெயலலிதாவின் மரணம்குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு, விசாரணை நடந்துவருகிறது. விசாரணை கமிஷனில் ஆஜராகியவர்கள், சசிகலா குடும்பத்தினருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை அள்ளிவீசியுள்ளனர். குறிப்பாக, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல்களைச் சொல்லியுள்ளனர். சசிகலா, தினகரன் ஆகியோர்மீது அவர்கள் இருவரும் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளனர். 



இதற்கிடையில், ஜெயலலிதாவின் மகள் என்று அம்ருதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு பரபரப்பானது. ஆனால், அந்த மனு தள்ளுபடிசெய்யப்பட்டாலும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், அம்ருதாவால் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்க, அவரது உண்மை விசுவாசிகள் முயற்சிசெய்துவருகின்றனர். 
 ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷனின் சந்தேகப்பார்வை சசிகலா குடும்பத்தினர்மீது விழுந்துள்ளது. அதனால், அதிலிருந்து தப்பிக்கவும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அனுதாபத்தைப் பெறவும் சசிகலா குடும்பத்தினர் ஆலோசனை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. சிறையிலிருக்கும் சசிகலாவை மன்னார்குடி குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் சமீபத்தில் சந்தித்துள்ளார். அப்போது, ஜெயலலிதா மரணம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், விசாரணை கமிஷன் ஆகியவைகுறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அதில், ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோவை வெளியிட சசிகலா சம்மதம் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகு, தினகரன் தரப்பு அந்த வீடியோவை எடிட்செய்து, 20 விநாடிகள் ஓடக்கூடிய காட்சியை மட்டும் வெளியிட்டுள்ளனர். 




அந்த வீடியோவை எப்படி வெளியிடலாம் என தினகரன், தன்னுடைய ஆதரவாளர்களுடன் நேற்றிரவு ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது, அவர்கள் தேர்வுசெய்த இடம், தலைமைச்செயலகம். வெற்றிவேல் எம்.எல்.ஏ மூலம் மீடியாக்களுக்குத் தகவல் நேற்றிரவே கொடுக்கப்பட்டது. இன்று காலை 10 மணியளவில், வெற்றிவேல் தன்னுடைய ஆதரவாளர்களுடன் தலைமைச்செயலகம் வந்தார். ஆனால், அவர் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே சில மீடியாக்களுக்கு ஜெயலலிதா சிகிச்சை வீடியோ அனுப்பப்பட்டது. வெற்றிவேல் பிரஸ்மீட் கொடுத்த சமயத்தில், அனைத்துச் செய்தித் தொலைக்காட்சிகளிலும் சிகிச்சை வீடியோ ஒளிப்பரப்பானது. அதை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் பார்த்தனர். 


வீடியோகுறித்து போனில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஆலோசித்ததாகச் சொல்லப்படுகிறது. அப்போது, வீடியோவுக்கு அப்போலோ மருத்துவமனைமூலம் பதில் கொடுக்கலாம் என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனையின் அதிகாரபூர்வ அறிக்கையை எதிர்பார்த்து, தினகரன் தரப்பினர் காத்திருக்கின்றனர். இதற்கிடையில், அந்த வீடியோவின் உண்மைத்தன்மையைக் கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்கின்றனர்.

 
 இதுகுறித்து தினகரன் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். "ஆர்.கே.நகர். இடைத்தேர்தலுக்கும் இந்த வீடியோவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஜெயலலிதாவின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும்வகையில் துரோகிகள் செயல்பட்டுவருகின்றனர். ஜெயலலிதாவின் வாரிசு என்று சொல்லி வெளியில் வந்திருக்கும் அம்ருதாவின் பின்னணியில் சிலர் இருக்கின்றனர். போயஸ் கார்டனிலிருந்து சுயநினைவு இல்லாமல்தான், ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டதாகவும் தொடர்ந்து அவர், அதே நிலையில் இருந்ததாகவும் தகவல் வெளியானது. இந்தச் சமயத்தில்தான், அப்போது நடந்த இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு அவர் கைரேகை வைத்ததாகவும் சொல்லப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதையும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் விசாரித்துவருகிறது. இவ்வாறு சசிகலா குடும்பத்தினருக்கு எதிராகச் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத்தான், இந்த வீடியோவை  வெளியிட்டுள்ளோம். இதுபோல இன்னும் பல வீடியோக்கள் எங்கள் வசம் உள்ளன. ஏன், ஜெயலலிதாவை மேல்சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச்செல்வது தொடர்பாக அமைச்சர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனை வீடியோவும் உள்ளது. அந்த வீடியோவை வெளியிட்டால், அமைச்சர்களின் சுயரூபம் மக்களுக்குத் தெரிந்துவிடும். இந்த வீடியோவை அப்போலோ மருத்துவமனை மறுக்கும்பட்சத்தில், அவர்களுக்கு பதில் சொல்லும்வகையில் இன்னும் சில வீடியோக்கள் எங்களிடம் உள்ளன. தேவைப்படும்போது அதையும் வெளியிடுவோம்"என்றனர். 


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்துசெய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு வேட்பாளர்கள் சிலரிடமிருந்தது. ஆனால், அறிவித்தபடி வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. ஆளுங்கட்சியினர், ஓட்டுக்கு ரூபாய் 6 ஆயிரம் வரை கொடுத்துள்ளனர். அதைவிட, தினகரன் தரப்பினர் ஓட்டுக்கு 10 ஆயிரம் வரை கொடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. போட்டி போட்டு ஓட்டுகளுக்குப் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளனர். ஆளுங்கட்சி தரப்பில் பணம் கொடுப்பதற்கு முன்புவரை தினகரன் வெற்றிபெறுவார் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், தற்போது ஆர்.கே.நகரின் அரசியல் சூழல் மாறியுள்ளதால், ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்டு, அனுதாபத்தை தினகரன் பெற முயற்சிசெய்வதாக அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வினர் சொல்லத் தொடங்கியுள்ளனர். ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவில் அவர் நலமுடன் இருப்பதால், அவரது மரணத்துக்கான காரணத்தை அப்போலோ உடனடியாகத் தெளிவுப்படுத்த வேண்டும் என்ற குரல்கள் கேட்கத் தொடங்கியுள்ளன. 'வீடியோவை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைக்கலாம்' என்று திட்டமிட்டவர்களுக்கு, அடுத்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதற்காக விரைவில் அடுத்த வீடியோவை வெளியிட தயாராக இருக்கிறார்களாம் தினகரன்தரப்பினர்.   
 
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");