[ad_1]

Chennai: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தரம்சாலாவில் இன்று தொடங்குகிறது. டெஸ்ட் தொடரில் ஓரளவு தாக்குப்பிடித்து வொயிட்-வாஷிலிருந்து தப்பித்துவிட்ட இலங்கை அணி, புதிய கேப்டன் திசாரா பெரேரா தலைமையில் ஒருநாள் தொடரில் மானம் காக்குமா? #INDvsSL

கோலி இல்லை - இலங்கை பெருமூச்சுவிட இந்த ஒரு காரணமே போதும். ஆனால், கோலி இல்லாத இந்திய அணியும் இலங்கையைப் பந்தாடும் அளவுக்கு பலமாகவே இருக்கிறது. கேப்டன் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக் என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். டெஸ்ட் போட்டியில் தடுமாறிய ரஹானே, கடைசி ஒருநாள் தொடரில் நன்றாகவே ஆடினார். ஓப்பனிங்கில் அசத்திய அவர், கோலியின் நம்பர்.3 பொசிஷனில் களமிறங்கக்கூடும். மனீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் வாய்ப்புக்குக் காத்திருப்பதால், முதல் போட்டியிலிருந்தே ரஹானே ஜொலிப்பது அவசியம். 




தோனி, கேதர் ஜாதவ் இருவரும் தங்களின் பழைய ஃபார்மை மீட்டெடுக்க வேண்டும். 2017-யை சிறப்பாகத் தொடங்கிய ஜாதவ், அதை நல்ல முறையில் முடித்துவைப்பதும் அவசியம். டெஸ்ட் தொடர் ஓய்வு ஹர்திக் பாண்டியாவுக்கு புத்துணர்வாக இருக்கும். தரம்சாலாவில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் ஆனவர். மிடில் ஆர்டரில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். 

பௌலிங்கில் இந்தியா முன்பைப் போல் இரண்டு ஸ்பின்னர்களுடன் களமிறங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் இருவரும்தான் ரோஹித்தின் சாய்சாக இருப்பார்கள். ஃபாஸ்ட் பௌலர்களில் புவி - பூம்ரா கூட்டணி மீண்டும் இணைந்து இலங்கையை பதம்பார்க்க ரெடி! அவ்வப்போது இருவரில் ஒருவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு சித்தார்த் கவுல்-க்கு வாய்ப்புக் கொடுக்கலாம். 



உபுல் தரங்காவின் தலைமையில் தொடர்ந்து 3 தொடர்களில் வொயிட்வாஷ்-ஆக, இப்போது திசேரா பெரேராவின் கேப்டன்சியில் முதன்முதலாகக் களமிறங்கப்போகிறது இலங்கை. இந்த ஆண்டில் நான்கு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. 21 தோல்விகள். இந்த மோசமான நிலைக்கு முடிவுகட்டத்தான் இந்த தலைமை மாற்றமும், அணியில் கொண்டுவந்திருக்கும் வீரர்கள் மாற்றமும். அந்த மாற்றத்துக்கு முதல் பலி - டெஸ்ட் கேப்டன் சந்திமல். மிடில் ஆர்டரில் நம்பிக்கை அளிக்கக்கூடிய ஒரு பேட்ஸ்மேனை  தேர்வுசெய்யவில்லை அந்த அணியின் தேர்வுக்குழு. ஆசம்..!

ஓப்பனிங்கில் உபுல் தரங்கா அவுட் ஆஃப் ஃபார்ம். திரிமண்ணே, குனதிலகா, சமரவிக்ரமா என நிரூபிக்காத பல பெயர்கள். மொத்தச் சுமையையும் சமக்கவேண்டிய பொறுப்பு மாத்யூஸ் தோள்களில். கேப்டன் திசாரா பெரேராவும் சமீப காலங்களில் சோபிக்கவில்லை. பௌலிங்கைப் பொறுத்தவரை சுரங்கா லக்மல், அகிலா தனஞ்சயா ஆகியோர் இந்தியாவுக்கு கொஞ்சம் அச்சுறுத்தல். நுவன் பிரதீப், துசந்தா சமீரா, சசித் பதிரானா....50 ஓவர்களை நிறைவு செய்ய இலங்கை வசம் பௌலர்கள் இருக்கிறார்கள்.



திசாரா பெராராவுக்கு இது மிகவும் முக்கியமான தொடர். வரிசையாக பல கேப்டன்கள் மாற்றப்பட்டு, இப்போது இவர் கையில் மிகப்பெரிய பொறுப்பு வந்துள்ளது. ஜிம்பாப்வே, பாகிஸ்தான் போன்ற அணிகளுடனும் படுதோல்வி அடைந்துள்ள நிலையில், இந்தத் தொடரிலாவது கௌரவத்தை தக்கவைக்க இலங்கை போராட வேண்டும். 


போட்டி காலை 11.30 மணிக்குத் தொடங்குகிறது. வடமாநிலங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால்,  இந்தப் போட்டியும், பஞ்சாப்பில் நடக்கும் இரண்டாவது போட்டியும், இரண்டு மணி நேரம் முன்னதாகவே தொடங்குகின்றன. தரம்சாலாவில் நடந்துள்ள 3 போட்டிகளில் இந்தியா இரண்டில் வென்றுள்ளது. 'dew factor' ஆட்டத்தில் முக்கிய அங்கம் வகிக்கும். அதனால் டாஸ் வெல்லும் அணி, ஃபீல்டிங் செய்யவே முற்படும். கோலியும் இல்லை, டெல்லி போல் மாசுக்காற்றும் இல்லை...இந்தப் போட்டியிலாவது பாசிடிவ் மைண்ட் செட்டோடு ஆடுங்கள் இலங்கை வீரர்களே!

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");