[ad_1]
"நம்ம ஊர் மூலிகை இலையைக் கசக்கி நுகர்ந்தாலே அந்த வாசனையிலேயே பாதி வியாதி பறந்துப்போயிடும். ஆங்கில மருந்து மாத்திரைகளுக்கு இப்படியான மணமோ குணமோ உண்டா சொல்லுங்க. ஆயிரம் இருந்தாலும் நம்ம மூலிகைகள்போல வராது" என்று தெலுங்கு தெறிக்க தமிழ் பேசுகிறார் ராஜூ. புதுக்கோட்டை நகரில் மூலிகைத் தாவரங்கள் சூழ, தைலம் விற்பனை செய்யும் ஹைதராபாத் வியாபாரி இவர்.அவரைச் சுற்றி, சிறியாநங்கை, பெரியாநங்கை, கீழாநெல்லி, வல்லாரை, தூதுவளை, தும்பை, கரிசலாங்கண்ணி, பிரண்டை, காட்டுக்கற்றாழை உள்ளிட்ட மூலிகைத் தாவரங்கள் பசுமை மாறாமல் கடை விரித்துக் கிடந்தது. புதுக்கோட்டை நகர் மக்கள் அந்த மூலிகைத் தாவரங்களை அதிசயமாகப் பார்த்துக்கொண்டே ராஜூ, ஒரு சிறு நெகிழிக்குப்பியில் அடைத்துத் தந்த களிம்பை ஆர்வத்தோடும் நம்பிக்கையோடும் வாங்கிச் செல்கின்றனர். ஒரு சிலரின் கால்களில் ராஜூவே இலவசமாக அந்தக் களிம்பைத் தடவிவிட்டார்.வியாபாரம் சற்று ஓய்ந்த நேரம் பார்த்து ராஜூவிடம் பேசினோம். "நீங்கள் இங்கே பார்க்கிற மூலிகைத் தாவரங்களைக்கொண்டு தயாரித்த தைலம் இது. வலி நிவாரணி. கை கால் கழுத்து வலிகளுக்கு இந்தத் தைலம் சிறந்த மருந்து. வலி உள்ள இடத்தில் தேய்த்துவிட்டு, சிலமணி நேரங்கழித்து வெந்நீர் ஒத்தடம் கொடுத்தால், வலி போயிடும்" என்றவரிடம், 'மூலிகைகளைக் காட்டி, போலி தைலத்தை விற்கறீங்கனு பொதுவான குற்றச்சாட்டு உங்களை மாதிரியான நபர்கள்மீது இருக்கிறதே. அதுக்கு உங்கள் பதில் என்ன' என்று கேட்டேன். ராஜூ, பதறாமல் கோபப்படாமல் நமக்கு பதில் சொன்னார். "நாங்கள் பரம்பரையாகச் செய்து வரும் தொழில் இது. நிச்சயமா தொழில் துரோகம் பண்ண மாட்டோம். நாங்கள் 10 பேர் ஹைதராபாத்திலிருந்து தமிழ் நாட்டுக்குக் கிளம்பி வருவோம். இந்தத் தைலத்தைத் தயாரித்து எடுத்து வருவோம். இதில் கலந்திருக்கும் மூலிகைத் தாவரங்களை இங்குள்ள காடுகளில் மலைகளில் தேடிப் பறித்து வருவோம். நாங்கள் பொய் சொல்லியோ மோசடி செய்தோ இந்தத் தொழிலை எந்தக் காலத்திலும் பார்த்ததில்லை" என்றார்.மேலும் அவரே தொடர்ந்து, "என்னிடம் மருந்து வாங்குகிறவர்கள் தொடர்ந்து வாங்க வேண்டும் என்பதற்காக, என்னுடைய விசிட்டிங் கார்டையும் அவர்களுக்குக் கொடுத்துவிடுவேன். அதில், என்னுடைய போன் நம்பர் இருக்கும். நான் போலியான மருந்தை விற்றால், விசிட்டிங் கார்டைத் தரமாட்டேனே" என்றபடியே நமக்கொரு விசிட்டிங் கார்டைத் தந்தார். அதில் அவரது பெயர், முகவரி, மற்றும் தொடர்பு எண் இருந்தது. நாம் கேட்காமலேயே ராஜூ ஒரு புத்தகத்தை எடுத்து நம்மிடம் தந்தார். அதில் நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகைகளின் வண்ணப் படங்கள் அச்சிடப்பட்டு ,அந்த மூலிகைகளின் பெயர், அதன் மருத்துவக் குணங்கள் பற்றிய குறிப்புகள் தெலுங்கு மொழியில் இருந்தன. விடை பெறும் தருணத்தில் ராஜூ சொன்ன ஒரு தகவல், பலகாரங்களைக் கண்டாலே வெளுத்துக்கட்டும் பழக்கம் தமிழ்நாட்டு மக்களுக்கானது. "காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இரண்டு வடையோ அப்பமோ சமோசாவோ சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு நாற்பது வயதுக்குப் பிறகு, கண்டிப்பா மூட்டு வலி வந்துவிடும். அந்தப் பழக்கம் தமிழ் நாட்டில் உள்ளவர்களிடம் இருக்கு. அதனால்தான் எங்கள் தைலத்துக்கு இங்கே டிமாண்ட் இருக்கிறது" என்றார்.
Pudukottai:
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
புதுக்கோட்டையைக் கலக்கும் ஹைதராபாத் மூலிகைகள்! | Hyderabad traders in Pudukottai
TAGS :
COMMENTS