[ad_1]

Thoothukkudi: "தூத்துக்குடி மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் தோணித்தொழிலாளர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை மாவட்ட நிர்வாகம் தாமதமின்றி வழங்கிடவேண்டும்" என தி.மு.க., மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ஜோயல் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிடுள்ள  அறிக்கையில், "கடந்த மாதம் வங்கக்கடலில் திடீரென உருவான ஓகி புயலின் தாக்கத்தால் கடலோர மாவட்டங்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின. இதில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இங்கு மீன்பிடி தொழில் சரியாக இல்லாதநிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். ஓகி புயலின் தாக்கத்தில்  தூத்துக்குடியை சேர்ந்த மீனவர் ஜூடு,  உயிர் இழந்த துயரச்சம்பவமும், அத்துடன் மீனவர்கள் பலரும் காணாமல் போயினர்.


 

இந்தச் சூழ்நிலையில் ஓகி புயலால் தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் தங்களின் முக்கிய வாழ்வாதாரமான படகுகள், மீன்பிடி வலைகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். ’ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்., ஒவ்வொரு நாளும் துயரம்தான்..' என்ற பாடல் வரிகளுக்கு ஏற்றபடி இன்றுவரை மீனவர்களின் வாழ்க்கை மிகவும் துயரத்துடன் இருந்து வருகிறது.

இப்புயலின் பாதிப்பால் படகுகள், மீன்பிடி வலைகளை இழந்துள்ள தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் குறித்த ஆய்வுப்பணிகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களை கண்டறிந்து அவர்கள் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் தேவையான வசதிகளை துரிதமாக செய்து கொடுத்திடவேண்டும்.

நமது மாவட்ட மீனவர்கள் இனிவரும் காலங்களில் மீன்பிடி தொழில் சரியாக இல்லாமல் வெளிமாவட்டத்திற்கு செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்படாதவகையில் மீன்பிடி தொழில் தடையின்றி நடந்திடுவதற்கான வழிவகைகளை மீன்வளத்துறையினர் ஏற்படுத்தி தர வேண்டும். 



இப் புயலில் சிக்கிய தூத்துக்குடியைச் சேர்ந்த பல தோணிகள், லட்சத்தீவு உள்ளிட்ட ஆழ்கடல் பகுதிகளில் மூழ்கி விட்டன. இதனால் தோணியின் உரிமையாளர்களும், தோணித்தொழிலை நம்பி வாழ்ந்து வந்த தோணித்தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் தேவையான நிவாரண உதவிகளையும், புதியதாக தோணி வாங்குவதற்குரிய உரிய இழப்பீட்டு தொகையினையும் மாவட்ட நிர்வாகம் தாமதமின்றி வழங்கிடவேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரையிலும் சுமார் 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இப் புயலால் நமது மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள், தோணித்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து பாதுகாத்திட மாவட்ட நிர்வாகமும், மீன்வளத்துறையினரும் இனியாவது துரித நடவடிக்கை எடுத்திடவேண்டும். 



இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்களால் மீனவர்கள் பாதிக்கப்படாத வகையில் மாவட்டத்திலுள்ள கடலோரக் கிராமங்களில் நவீன தகவல் தொழில்நுட்ப சாதனங்களை நிறுவ வேண்டும். இயற்கை பேரிடர் காலங்களில் ஆபத்தில் சிக்கி தவிக்கும் மீனவர்களை பத்திரமாக பாதுகாத்து மீட்க ஏதுவாக மீனவர்களின் படகுகளில் ''அவசர நிலை நிலை-குறியீட்டு ரேடியோ பெக்கான்'' எனப்படும்   'இ.பி.ஐ.ஆர்.பி'(Emergency Position Indicating Radio Beacon)கருவி அல்லது ''தானியங்கி அடையாள அமைப்பு'' எனப்படும் 'ஏ.ஐ.எஸ்'(Automatic identification system) கருவிகளை இலவசமாக பொருத்திடவேண்டும்.தூத்துக்குடி மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் தோணித்தொழிலாளர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும், இழப்பீட்டு தொகையினையும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தாமதமின்றி வழங்கிட வேண்டும்." என தெரிவித்துள்ளார்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");