[ad_1]
குஜராத் மாநிலத்தில் 89 தொகுதிகளில் முதல்கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான அரசியல்கட்சிகளிள் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. பி.ஜே.பி. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அதன் துணைத் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் மோடி தன் பிரசார உரையில், அமைதி, ஒற்றுமை, நம்பிக்கை என்றும் தாரக மந்திரத்துடன் குஜராத் மாநிலத்தில் முன்னேற்றத்தின் உச்சிக்குக் கொண்டுசென்றிருப்பதாகக் குறிப்பிட்டார். கலோல் என்ற இடத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், கிராமங்களுக்கு மின் இணைப்பை உறுதி செய்வதாக ஏற்கெனவே தான் தெரிவித்த போதெல்லாம், காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்ததாகவும், ஆனால், வளர்ச்சியில் முன்னோடி மாநிலமாக குஜராத் இருப்பதற்கு பி.ஜே.பி அரசே காரணம் என்றும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி அதன் பழைய தந்திரத்துடன் இத்தேர்தலில் போட்டியிடுவதாகவும், பி.ஜே.பி-யோ மாநிலத்தின் வளர்ச்சியை முன்வைத்து களம் காணுவதாகவும் மோடி குறிப்பிட்டார். முன்னதாக, குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
பலான்பூர், சனாந்த், வதோதரா ஆகிய இடங்களிலும் பிரதமர் மோடி பிரசார பொதுக்கூட்டங்களில் உரையாற்றி வாக்குசேகரித்தார். இதேபோல், பி.ஜே.பி. தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் பி.ஜே.பி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியும், தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
குஜராத் வளர்ச்சியை முன்வைத்தே தேர்தலைச் சந்திக்கிறோம் - மோடி! | Development of Gujarat is the key issue of BJP campaign
TAGS :
COMMENTS