[ad_1]





”சிவகார்த்திகேயனுக்கு நான் போட்டி இல்லை” எனப் படவிழாவில் நடிகர் சந்தானம் விளக்கமளித்துள்ளார்.




சந்தானம், வைபவி நடிக்க சேதுராமன் இயக்கும் திரைப்படம், ’சக்கபோடு போடு ராஜா.’ வி.டி.வி கணேஷ் இந்தப் படத்தைத் தயாரிக்க, முதல் முறையாக சிம்பு இசையமைக்கிறார். இசையமைப்பாளராக சிம்பு அறிமுகமாகும் படம் என்பதால், அதன் அறிவிப்பு வந்ததிலிருந்தே பாடல்களுக்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. சமீபத்தில்தான் இந்தப் படத்தின் ’கலக்கு மச்சான்’ பாடல், சிங்கிள் ட்ராக்காக வெளியிடப்பட்டது. சிம்பு மற்றும் ரோகேஷ் எழுத, அனிருத் பாடியிருந்த ’கலக்கு மச்சான்’ பாடல், ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் அண்ட் ஷேர்களைப் பெற்றது. அதன் பிறகு, ’காதல் தேவதை’ பாடலின் டீசரை வெளியிட்டிருந்தது. அந்தப் பாடலை வைரமுத்து எழுத, யுவன்ஷங்கர் ராஜா பாடியிருந்தார். 

 இன்று நடந்த திரைப்பட விழா ஒன்றில் பேசிய நடிகர் சந்தானம், “டிசம்பர் 22-ம் தேதி, 'சக்கபோடு போடு ராஜா' திரைப்படம் வெளியாக உள்ளது. என்னை சினிமாவில் அறிமுகம்செய்த நடிகர் சிம்புவை என்னுடைய படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகம் செய்வதில் எனக்குப் பெருமையாக உள்ளது. சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு நான் போட்டியில்லை. அப்படி இருந்தாலும் அது ஆரோக்கியமாகத்தான் இருக்கும்” எனக் கூறினார்.


சந்தானத்தின் திரைப்படம் ரிலீஸாகும் அதே டிசம்பர் 22-ம் தேதிதான் சிவகார்த்திகேயன்- நயன்தாரா நடிப்பில் உருவான ‘வேலைக்காரன்’ திரைப்படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");