[ad_1]





விமானத்தில் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக, நடிகை ஒருவர் நேற்று இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நடிகைக்கு பாலியல் தொல்லைகொடுத்த நபரை போலீஸார் நேற்று கைதுசெய்தனர். 


 


நடிகை தன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில், ‘டெல்லியிலிருந்து மும்பைக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றபோது, பின்னால் அமர்ந்திருந்த சக பயணி ஒருவர், நள்ளிரவில் காலால் தன்னைச் சீண்டினார். இதுதான் நீங்கள் பெண்களுக்குக் கொடுக்கும் பாதுகாப்பா. தட்டிக் கேட்க யாருமேயில்லை.. பெண்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்ள வேண்டும். இது மிகவும் மோசமான அனுபவம்’ என்று கண்ணீருடன் பேசியுள்ளார்.

இதையடுத்து, சமூக வலைதளங்களில் நடிகைக்கு ஆதரவாக நெட்டிசன்கள் கருத்து பதிந்துவந்தனர். மகாராஷ்டிரா மாநில பெண்கள் ஆணையம்,  இந்தச் சம்பவம்குறித்து விசாரணைக்கு ஆணையிட்டது. அதைத் தொடர்ந்து, பாலியல் தொல்லைகொடுத்த 39 வயதான விகாஸ் என்பவரை  மும்பை போலீஸ் கைதுசெய்தது. அவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்படுகிறார்.இதனிடையே ஊடகங்களுக்குப் பேட்டியளித்த விகாஸின் மனைவி, “என் கணவர் சமுதாயத்தில் ஒரு நல்ல இடத்தில் இருக்கும் தொழிலதிபர். என் தந்தை ஓய்வுபெற்ற ராணுவ வீரர். எங்கள் நெருங்கிய உறவினரின் இறுதிச்சடங்குக்காகதான் என் கணவர் டெல்லியிலிருந்து மும்பை பயணித்தார். சோகமான மனநிலையில் இருக்கும் அவர்மீது இப்படி ஒரு பழி சுமத்துவது அதிர்ச்சியளிக்கிறது. நடிகையுடன் அவரின் தாயும் பயணம்செய்திருக்கிறார். அப்படி இருக்கும்போது, என் கணவர் தவறாக நடந்துகொள்ளும்போது அவரை ஏன் தாக்கவில்லை, கூச்சல் எழுப்பவில்லை.... இரண்டு மணி நேரம் கழித்து சமூக வலைதளங்களில் பதிந்தது ஏன்? இது முழுக்கமுழுக்க விளம்பரத்துக்காகச் செய்தது’ என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


My husband is innocent, had no intention to molest. There was a young death in family,which is where he went , hadn't slept for 24 hours. He asked crew to not disturb & wanted to sleep. His foot was on arm rest but not with intention to harass: Wife of accused in #ZairaWasim case pic.twitter.com/UA7WokkJfe
— ANI (@ANI) December 11, 2017



விகாஸின் மனைவிக்குப் பதிலளிக்கும் விதமாக நெட்டிசன்கள் கொந்தளித்துவருகின்றனர். ''பாலியல் தொந்தரவுக்குள்ளாகும் பெரும்பாலான பெண்கள், உடனடியாக ரியாக்ட் செய்யமுடியாது. பயமும், தயக்கமும் இருப்பது சகஜம்தான். பாதிக்கப்பட்ட நடிகை மைனர். அவருக்கு இந்தச் சூழலைக் கையாளும் பக்குவம் போதவில்லை” என்று பதிவிட்டுவருகின்றனர்.

 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");