[ad_1]
கோடிக்கணக்கில் பணம் வென்றதாக செல்போன்களுக்கு வரும் குறுஞ்செய்திகள் மற்றும் இ-மெயில்களை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களை ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
’இங்கிலாந்து லாட்டரியில் உங்கள் நம்பருக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைத்துள்ளது. அதற்காக உங்கள் மொபைல் எண்ணுடன், முகவரி, வங்கிக் கணக்கு, ஆதார் அட்டை உள்ளிட்ட சில விவரங்களை அளித்தால் போதும்’ என்ற வாசகங்களைத் தாங்கிய குறுஞ்செய்திகள் உங்கள் நம்பருக்கும் வந்திருக்கலாம். அந்த பரிசுத் தொகையை அளிக்க நீங்கள் சில ஆயிரம் ரூபாய்களைச் செலுத்த வேண்டும் என்று கூறியது. அதேபோல, ரிசர்வ் வங்கி நடத்திய பரிசுப் போட்டியில் உங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பரிசு கிடைத்திருக்கிறது என்ற இ-மெயிலையும் நம்மில் பலர் கடந்துவந்திருக்கலாம். அந்தவகை மோசடிகளை நம்ப வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி, தொடந்து மக்களுக்கு அறிவுறுத்திவந்துள்ளது. இந்த நிலையில், பொதுமக்களுக்கு குறுஞ்செய்திகள்மூலம் எச்சரிக்கை விடுத்து வருகிறது. அந்தவகை மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கையையும் ரிசர்வ் வங்கி தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. இதுபோன்ற மோசடி குறுஞ்செய்திகள் மற்றும் இ-மெயில் ஆகியவைகுறித்து பொதுமக்கள் 8691960000 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து புகார் அளிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும், மோசடி புகார்களுக்கென்றே ’sachet.rbi.org.in’ என்ற பிரத்யேக இணையதளத்தையும் ரிசர்வ் வங்கி வடிவமைத்துள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
'கோடிக்கணக்கில் பணம் கிடைத்ததாக வரும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்': ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
TAGS :
COMMENTS