[ad_1]
’யாகூ’ இணையதளத்தில் அதிகம் தேடப்படும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் தோனியை முந்தியுள்ளார், தற்போதைய கேப்டன் விராட் கோலி.
2017-ம் ஆண்டில், அனைத்துவிதமான ஃபார்மட்டுகளிலும் சேர்த்து விராட் கோலி சேர்த்த ரன்கள் 2,818. இந்த வகையில், ஒரே ஆண்டில் அதிக ரன்கள் குவித்த பட்டியலில் சங்ககாரா 2,868 ரன்கள் (2014) மற்றும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 2,833 (2005) ஆகியோர் முதல் இரண்டு இடத்தில் இருக்கின்றனர். டெஸ்ட் தொடருக்குப் பிந்தைய ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டிருப்பதால், நடப்பு ஆண்டில் இனிமேல் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் பேட் செய்யப்போவதில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2018 ஜனவரியில் தொடங்கும் டெஸ்ட் தொடரே, விராட் கோலி பங்கேற்கும் அடுத்த சர்வதேச கிரிக்கெட் தொடராக இருக்கும்.
பல சாதனைகளைத் தொடர்ச்சியாக நிகழ்த்திவரும் விராட் கோலியை, சமீபத்தில் இலங்கையின் சங்ககரா அதிகப்படியாகவே புகழ்ந்து தள்ளினார். இந்நிலையில் ‘யாகூ’ தேடு இணையதளத்தில் அதிகம் தேடப்படும் விளையாட்டு வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில், கடந்த முறை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியே முதலிடம் வகித்தார். ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில், தற்போதைய கேப்டன் விராட் கோலி முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் பட்டியல்: தோனியை முந்திய கோலி
TAGS :
COMMENTS