[ad_1]





Chennai: மீனவர்கள் காணாமல் போன விவகாரத்துக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று விஷால் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். 





விஷால் பதிவிட்டுள்ள பேஸ்புக் பதிவில், 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தில் போட்டியிடுவதற்கு யாருடைய உந்துதலும் இல்லாமல் நானாக போட்டியிட்டேன். அந்தச் செயலின் பின்னால், எந்த அரசியல் கட்சியோ, யாருமோ இல்லை. மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் நான் போட்டியிட்டேன். என்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டது, நெறியற்றது மற்றும் நியாயமற்றது.

என் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட காட்சிகளின் மூலம், ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளதை தமிழக மக்கள் பார்க்க மற்றும் புரிந்துகொள்ள முடியும். ஆர்.கே.நகர் தொகுதியில் நான் போட்டியிட்ட விவகாரத்தைவிட கன்னியாகுமரி மீனவர்கள் காணாமல் போன விவகாரத்தில் நாம் கவனம் செலுத்தவேண்டும். மேலும் நம்முடைய ஆதரவையும் அளிக்கவேண்டும். காணாமல்போன மீனவர்களை கண்பிடிக்கும் விவகாரத்துக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.

கன்னியாகுமரி மீனவர்களை மீட்கும் பணிக்கு, நாம் அனைவரும் கரம்கொடுக்கவேண்டும். ஆர்.கே.நகரில் உள்ள நல்ல உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மக்களுக்கு சேவை செய்வதையும், ஜனநாயகத்துக்காக போராடுவதையும் தொடர்வேன். மீண்டும், அரசியலில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவேன்' என்று குறிப்பிட்டுள்ளார். ஆர்.கே.நகர் தேர்தலில், நான் போட்டியிட்ட விவகாரத்தைவிட கன்னியாகுமரி மீனவர்கள் காணாமல் போய்இருக்கும் விவகாரத்தில் அதிக கவனத்தை செலுத்தவேண்டும் என்று விஷால் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 
 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");