[ad_1]
மத்திய அரசில் உள்ள காலிப்பணியிடங்கள் எவ்வளவு என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்துள்ளார்.
இன்றையச் சூழலில் வேலையில்லாத் திண்டாட்டம் மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இதனால், அரசு வேலைக்கு விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதை நாம் காணலாம். 10,000-க்கும் குறைவான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காகத் தமிழக அரசு நடத்தும் டி.என்.பி.சி. குரூப் 4 தேர்வுக்கு19.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில், மத்திய அரசுப் பணியில் காலியாக உள்ள பணியிடங்கள் எத்தனை என்ற கேள்வி மக்களவையில் எழுப்பப்பட்டது. பணியாளர் நலன் துறையின் இணை அமைச்சர் ஜிதேந்திரசிங் அந்தக் கேள்விக்கு எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார். அந்தப் பதிவில், ‘மத்திய அரசுப் பணியாளர்களுக்கான ஊதியம் மற்றும் படி குறித்த ஆண்டறிக்கையின்படி மொத்த பணியிடங்கள் 36,33,935. இதில், கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி நிலவரப்படி 4,12,752 பணியிடங்கள் காலியாக இருக்கிறது’ என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அவர் மத்திய அரசுப் பணிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது பற்றிய எந்தவொரு பரிந்துரையும் அரசின் பரிசீலனையில் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
மத்திய அரசில் உள்ள காலிப்பணியிடங்கள் எத்தனை தெரியுமா?
TAGS :
COMMENTS