[ad_1]
ஃபேஸ்புக், யூ-டியூப் ரெண்டுலேயும் சக்கைபோடு போட்டு வருகிறார் அபிஷ்ட்டு(எ) விக்கி. குறிப்பிட்ட சில காட்சிகளை, தன் காமெடி கலந்த தொனியில் இவர் வெளியிட்ட வீடியோக்கள் எல்லாம் ஃபேஸ்புக்கில் செம ஹிட். `உங்களைப் பேட்டி எடுக்கலாமா ப்ரோ, எங்க இருக்கீங்க?' என தொடர்பு கொண்டபோது `சென்னைக்கு மிக அருகில்தான், செங்கல்பட்டு' எனத் தன்னைப் பற்றியும் தன் டீமைப் பற்றியும் ஜாலியாகப் பேச ஆரம்பித்தார்.
``யார் இந்த அபிஷ்ட்டு?''
``நான் படிச்சது, வேலை பாக்குறது எல்லாமே செங்கல்பட்டுதான். வாரம் முழுக்க ஆபீஸ் வேலைகள் இருக்கும். வீக் எண்ட் வெட்டியாதானே இருப்போம், யூ-டியூப் சேனல் ஓபன் பண்ணி மக்கள்கிட்ட நேரடியா போய் பார்த்து, யாரும் பேசாத சில விஷயங்கள் பேசி அதை வீடியோ பண்ணலாம்னு ப்ளான் பண்ணோம். நான், சத்யகிஷோர், ப்ரித்தீவ்னு நண்பர்கள் எல்லாம் பெசன்ட் நகர் பீச்ல போய் நின்னோம். கேமராவை தூக்கிட்டு போய் நின்னதும், `யார்றா இவனுங்க கோமாளி'ங்கிற ரேஞ்சுலதான் பார்த்தாங்க. அப்படியே ஒரு சில பேர் பேச ரெடியா இருந்தாலும் நீங்க முன்னாடியே கேள்வியைச் சொல்லுங்க, நான் ரெடியாகிட்டு பதில் சொல்றேன்னு சொல்லிருவாங்க. சரினு கேள்வியைக் கேட்டா `நல்ல கேள்வி, அடுத்த கேள்வி'னு போயிருவாங்க. இன்னும் சொல்லப்போன பிச்சைக்காரங்க மாதிரிதான் எங்களைப் பார்த்தாங்க. சரி இது வேலைக்கு வராது நம்ம நேரா பிச்சைக்காரங்ககிட்டே போய் அவங்ளுடைய வாழ்க்கை எப்படி இருக்கும்னு சுவாரஸ்யமா ஒரு வீடியோ பண்ணலாம்னு முடிவு பண்ணோம். அந்த வீடியோவே அப்புறம் விக்ரமன் சார் படம் மாதிரி எமோஷனலா ஆகிடுச்சு.''
``அப்புறம் ஏன் சினாரியோ மாதிரியான வீடியோக்கள்ல இறங்கிட்டீங்க?''
``பொதுவா அரசியல், சினிமாவை கலாய்க்கிற மாதிரிதான் எல்லாரும் வீடியோ பண்றாங்க. `அஜித்தோட அடுத்த படம் என்ன?', `பைரவா படத்துடைய கலெக்ஷன் எவ்வளவு?'னு கேள்வி கேட்டா மக்கள் ஈசியா பதில் சொல்லிருவாங்க. இதே பெண்களுடைய மாதவிடாய் பற்றிய கேள்விலாம் கேட்டா யாருக்கும் தெரியாது. அது மாதிரி சில சென்சிட்டிவ் விஷயங்களை வெச்சு பண்றதுதான் எங்களோட ப்ளான். ஆனா அதுக்குச் சரியான ரெஸ்பான்ஸ் வரல. சரி வழக்கம்போல நம்ம நாலு சுவருக்குள்ளே வீடியோ பண்ணலாம்னு பண்ண ஆரம்பிச்சதுதான் இந்த `அபிஷ்ட்டு'. `பிக் பாஸ்' பீக்ல இருந்த டைம். அதை வெச்சுதான் எங்க டீம் பிள்ளையார் சுழி போட்டுச்சு. அது நல்ல ஹிட் ஆச்சு. அப்புறம் தீபாவளி டைம்ல பண்ண வீடியோ, ஐ.டி மக்களோட கஷ்டம், மிடில் க்ளாஸ் ஃபேமிலில பிறந்தவங்களோட கஷ்டம்னு சினாரியோ மாதிரியான வீடியோக்களைப் பண்ண ஆரம்பிச்சோம். மில்லியன் கணக்குல வியூஸ் வந்ததும் ரொம்ப குஷியாகிடுச்சு. அடுத்தடுத்த வீடியோ பண்ணணும்னு ஒரு ஆர்வமும் வந்துச்சு. வெளிலேயும் `அபிஷ்ட்டு' வீடியோ பண்றது இவங்கதானே'னு கண்டுபிடிக்க ஆரம்பிச்சாங்க. வாராவாரம் வீடியோவை தொடர்ந்து பண்ண ஆரம்பிச்சோம்.''
``நீங்க வேலை பாக்குறதே ஐ.டி கம்பெனி, அங்க ரியாக்ஷன் எப்படி இருக்கும்?''
``நான் ஐ.டி ட்ரோல் வீடியோ பண்ணி அது ஹிட் ஆகும்போதுதான் செம ஜாலியா இருந்தது. எங்க ப்ராஜெக்ட்ல இருக்கவங்களே `டேய் நீ என்னைப் பத்திதானே பேசுன'னு கேட்பாங்க. இன்னும் சொல்லப்போனா அவங்களே என்னுடைய வீடியோக்களை எல்லாம் ரசிப்பாங்க. `ஏன்டா என்னைய இந்தக் கிழி கிழிச்சிருக்க'னு எங்க மேனேஜர் சிரிச்சுகிட்டே கேட்டார். அப்ரைஸல் போடும்போதுதான் தெரியும், ஜாலியா எடுத்துகிட்டாங்களா, சீரியஸா எடுத்துகிட்டாங்களான்னு.''
`` டீமுக்கு `அபிஷ்ட்டு'ங்கிற பெயர் எப்படி வந்தது?''
``அபிஷ்ட்டு பெயர்க் காரணம்னு பார்த்தா பெருசா எதுவும் இல்லை. மக்கள்கிட்ட யாரும் பேசாத விஷயங்களைப் பேசணும், அது யூத் கன்டென்டா இருக்கணும். அதுனால என்ன பெயர் வைக்கலாம்னு யோசிச்சு, இந்தப் பெயரை முடிவு பண்ணோம். இந்தப் பெயர் கொஞ்சம் ஜாலியான டோன்ல இருக்கும். சேட்டை பண்றவன், அதிகபிரசங்கித்தனமா பேசுறவன்னு அர்த்தம். அதனால இந்தப் பெயர் கொஞ்சம் மேட்ச் ஆச்சு.''
''சினிமா ஆசை, வாய்ப்பு ஏதாவது வந்துச்சா?''
``எங்களுக்கு சினிமா ஆசைன்னு பெருசா இல்லை. சேனல்னு ஆரம்பிச்ச மெட்ராஸ் சென்ட்ரல், எரும சாணினு எல்லாரும் சினிமாவுக்குப் போயிட்டாங்க. வெளிநாடுகள்ல யூ-டியூப் சேனல்காகவே நிறைய பேர் இருக்காங்க. அவங்களுக்கு அது மட்டும்தான் வேலையா இருக்கும். அது மாதிரிதான் எங்களுக்கும். யூ-டியூப், சோஷியல் மீடியாதான் எங்களோட ஒட்டுமொத்த இலக்கு. இருந்தாலும் எங்க வீடியோ பார்த்துட்டு `ஆரண்ய காண்டம்' பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா அவருடைய அடுத்த பட ஆடிஷனுக்குக் கூப்பிட்டார். வேண்டாம்னு சொல்லிட்டோம். சீக்கிரமே யூ-டியூப்ல நல்ல ஃபேமஸா வருவோம்னு நம்பிக்கை இருக்கு'' என்று சொல்லிமுடிக்கிறார் 'அபிஷ்ட்டு' விக்னேஷ்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
'ஏன் இந்தப் பேர் தெரியுமா?' - ஃபேஸ்புக் ஹிட் 'அபிஷ்ட்டு' டீமின் கலாய்!
TAGS :
COMMENTS