[ad_1]
திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் அனிதா, ’2017-18-ம் கல்வியாண்டுக்கு, அவசர சிகிச்சை நுட்புநர், சுவாசக் கோளாறு சிகிச்சை நுட்புநர், சிறுநீரக சுத்திகரிப்புத்துறை நுட்புநர், உணர்வகற்றியல் துறை நுட்புநர், அறுவை அரங்கு நுட்புநர், முடநீக்கியியல் சிகிச்சைப் பிரிவு நுட்புநர், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர், மருத்துவ ஆய்வு நுட்புநர் ஆகிய பட்டயப்படிப்புகளுக்கும், நுண்கதிர் மருத்துவ பட்டயப் படிப்புக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களைத் தமிழக அரசின் சுகாதாரத்துறை இணையதளத்தின் லிங்க் - http://www.tnhealth.org/online_notification/notification/N17121155.pdf பதிவிறக்கம் செய்யலாம். இதுமட்டுமல்லாமல் மருத்துவக் கல்லூரிகளிலும் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்திசெய்த விண்ணப்பங்களை டிசம்பர் 16-ம் தேதி மாலை 5 மணிக்குள், செயலர், தேர்வுக்குழு, 162. ஈ.வெ.ரா. சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10 எனும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்” எனக் கூறினார். வாய்ப்புள்ள மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாமே.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் நேரம் இது!
TAGS :
COMMENTS