[ad_1]

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கிடையே நடந்துவரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அபார வெற்றியைப் பெற்று முன்னிலை வகிக்கிறது. அடுத்த போட்டியில் தோல்வியடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்பதால், வெற்றி பெற்றேயாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இங்கிலாந்து. வரும் 14-ம் தேதி ஆஸ்திரேலியாவின் வாகா மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்கிறது. இந்த மைதானத்தில் இங்கிலாந்து, கடைசியாக 1978-ல்தான் வெற்றி பெற்றிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஜாஷ் ஹேசல்வுட், `ஆஸ்திரேலியாவின் பௌலர்கள் அனைவரும் கைப்பற்ற நினைக்கும் விக்கெட் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் உடையதுதான்' என்றுள்ளார்.





இது குறித்து அவர் மேலும், `ஜோ ரூட் விக்கெட்தான் இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆர்டரை தவிடுபொடியாக்குவதற்கான சாவியாக இருக்கும். அவர், இன்னிங்ஸை ஒரு சமநிலையில் வைத்து, வேகமாக ரன்கள் அடித்துவிடுவார். அதனால், ஆஸ்திரேலியாவின் அனைத்து பௌலர்களும் அவருக்காகத் தயாராக இருக்க வேண்டும்' என்று கருத்து தெரிவித்துள்ளார். 
 

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");