[ad_1]
பஞ்சாப் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில், பட்டாசு வெடிக்க உயர் நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பஞ்சாப், சண்டிகர், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில், பட்டாசு வெடிக்க உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்தத் தடையை எதிர்த்து டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த மேல்முறையீடு, நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்குவந்தது. அப்போது நீதிபதிகள், பஞ்சாப், அரியானா மாநிலங்களிலும், சண்டிகார் யூனியன் பிரதேசத்திலும் பட்டாசுகளை வெடிக்க ஐகோர்ட் விதித்த தடையை அகற்ற மறுத்துவிட்டனர்.
இதையடுத்து, பட்டாசு வெடிப்பது தொடர்பாக இந்த மூன்று மாநிலங்களிலும் அமலில் இருக்கும் தடை தொடரும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த மேல்முறையீட்டு வழக்கு, 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி விசாரிக்கப்படும் என்றும் நீதிபதி அறிவிப்பு வெளியிட்டார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
பஞ்சாப்பில் பட்டாசு வெடிக்கத் தடை: தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
TAGS :
COMMENTS