[ad_1]
Chennai: அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட தனது ஆதரவாளர்களுடன் இணைந்து புதிய பேரவை ஒன்றைத் தொடங்க ஆர்.கே.நகர் சுயேச்சை எம்.எல்.ஏ.வான டி.டி.வி. தினகரன் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட தினகரனின் வெற்றி அ.தி.மு.க. தலைமையைக் கலக்கம் அடையச் செய்திருக்கிறது. அதனாலேயே, தினகரன் வெற்றிக்குப் பின்னர் அவசரமாகக் கூடிய அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள், தினகரனுக்கு ஆதரவளித்த நிர்வாகிகளைக் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டனர். இந்த நிலையில், அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட தனது ஆதரவாளர்களுக்கு பதவி தரும் பொருட்டு புதிய பேரவை ஒன்றைத் தொடங்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக தினகரனின் இல்லத்தில் நேற்று மாலை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. பேரவைக்கு உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகளையும் தினகரன் தரப்பு தீவிரப்படுத்தியிருக்கிறது. இதற்கான உறுப்பினர் சேர்க்கைப் படிவங்களும், ஆன்லைன் மூலம் உறுப்பினர்களை இணைக்க மொபைல் அப்ளிகேஷன் ஒன்றும் தயாராகி வருகிறதாம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்ற தினகரன், தொகுதி மக்களை வரும் 3-ம் தேதி சந்தித்து நன்றி தெரிவிக்க இருக்கிறார். அநேகமாக, அந்த சந்திப்புக்குப் பின்னர் அல்லது அதற்கு முன்பாகவே கூட பேரவைகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
புதிய பேரவையைத் தொடங்க தினகரன் திட்டம்!
TAGS :
COMMENTS