[ad_1]







மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ட்விட்டரில் ஒரு பதிவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஒரு ‘லைக்’ கொடுத்துள்ளார். எதற்காக அந்த ஒரு குறிப்பிட்ட பதிவுக்கு தோனி ‘லைக்’ கொடுத்தார் என ட்விட்டரில் ஒரு விவாதமே எழுந்துள்ளது.


இந்தியாவின் முன்னணி கேப்டனாக இருந்தவர் தோனி. பல சர்ச்சை கேள்விகளையும் தகர்த்து எறிந்து இன்று அதே வேகத்துடன் களத்தில் சுழன்று வருகிறார். இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பல ரசிகர்களைப் பெற்றிருக்கும் தோனியை ட்விட்டரில் 6.7 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். ட்விட்டரில் ரசிகர் கூட்டம் அதிகளவில் இருந்தாலும் இதுவரையில் 45 முறை மட்டுமே ட்வீட் செய்துள்ளார் தோனி.

இந்த வகையில் தற்போது மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், தோனி ஒரு ட்விட்டர் பதிவுக்கு ‘லைக்’ கொடுத்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் எந்தவொரு பதிவும் தோனியின் ‘லைக்’ பெறும் அளவுக்கு இல்லாதபோது, இந்த ஒரு பதிவு தோனியின் லைக்கைப் பெற்ற சீக்ரெட் குறித்து ட்விட்டரில் பல விவாதங்கள் தொடர்ந்து வருகிறது.



அதாவது, இந்திய செய்திகளுக்கான ஒரு ட்விட்டர் நியூஸ் பக்கம்தான், ‘இன்கபார்’. இந்தியில் வெளியாகும் அந்தச் செய்தி பக்கத்தில் இன்று 2019 உலகக் கோப்பை குறித்து ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், “2019 உலகக் கோப்பையில் விராட் கோலியின் இந்திய அணியே வெற்றிபெறும்” என்ற செய்தியுடன் `மேட்ச் ஃபிக்ஸ்ட்’ டேக் உடன் வெளியாகி இருந்தது. மேலும், அந்தப் பதிவில் கோலி, தோனி, ரவி சாஸ்திரி, பி.சி.சி.ஐ, கங்குலி, சச்சின், கபில் தேவ், அசாருதின், ஜடேஜா, காம்பிர், அனுராக் தாக்கூர், ராஜிவ் சுக்லா, சரத் பவார் ஆகியோர் டேக் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் பதிவுக்குத்தான் நம்ம `தல’, ‘லைக்’ தட்டி ட்விட்டரையே அதிர வைத்துள்ளார்.


 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");