[ad_1]
"மாநில ஆளுநர் பெயரளவில் மட்டுமே நிர்வாக தலைவர். தமிழக முதல்வர் தான் உண்மையான நிர்வாகத் தலைவர்” என ப.சிதம்பரம் விளக்கமளித்துள்ளார்.
கோவை, நெல்லை, கடலூர் எனத் தன் ஆய்வுப் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். முதலில் கோவை மாவட்டத்துக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணமாகச் சென்ற ஆளுநர், அரசு வளர்ச்சிப் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆய்வுசெய்தார். ஆளுநரின் ஆய்வால் தமிழகத்தில் பல்வேறு விவாதங்கள் எழுந்தன. ``ஆளுநரின் செயல்பாடு மாநில சுயாட்சி உரிமையைப் பறிக்கும் விதமாக உள்ளது” என்று எதிர்க்கட்சிகள் கொந்தளித்தன.
இந்நிலையில், ஆளுநரின் தொடர் ஆய்வு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக ஆளுநரின் அறிக்கை என்னை ஆச்சர்யப்பட வைக்கிறது. மாநில ஆளுநர் என்பவர் பெயரளவிலான நிர்வாகி. உண்மையான நிர்வாகத் தலைவர் மாநில முதல்வர் தான். மத்திய அரசை கண்டு முதல்வர் அச்சப்படுவதால் ஆளுநர் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார். ஆய்வுக்கூட்டங்களுக்கு ஆளுநர் அழைத்தால் செல்ல வேண்டாம் என முதல்வர் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ஆளுநர் என்பவர் உண்மையான தலைவர் அல்ல: ப.சிதம்பரம் விளக்கம்
TAGS :
COMMENTS