[ad_1]
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை எடுத்தது யார் என்ற கேள்விக்குத் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் அதிரடியாகப் பதில் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அவருடன் தோழி சசிகலா மட்டுமே இருந்து வந்தார். சிகிச்சையின்போது ஜெயலலிதாவைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்தநிலையில் கடந்த மாதம் டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்தது. பன்னீர்செல்வம் அணியினர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர்.
மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்ததோடு, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தார். இந்த ஆணையம் தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, ஆர்.கே.நகர் தொகுதிக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா பழச்சாறு அருந்துவது போன்ற வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் இன்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல், ஜெயலலிதா பற்றி அவதூறு பரப்பியதால் வீடியோ வெளியிட்டோம். வீடியோவை வெளியிடக் கூடாது எனத் தேர்தல் ஆணையம் என்னிடம் கூறவில்லை. ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை சசிகலாதான் எடுத்தார். ஜெயலலிதாவை ஐ.சி.யூ-விலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றிய பிறகு, இந்த வீடியோ எடுக்கப்பட்டது. ஜெயலலிதா நன்றாக இருந்தார் என்பது தர்மயுத்தம் நடத்திய பன்னீர்செல்வத்துக்குத் தெரியும்.
ஜெயலலிதா சிகிச்சைப் பெற்ற வீடியோ இருந்தது அரசாங்கத்துக்குத் தெரியும். தேர்தலுக்கும் ஜெயலலிதா வீடியோ வெளியானதற்கும் தொடர்பில்லை. இந்த வீடியோ போன்று பல ஆதாரங்கள் தங்களிடம் உள்ளன; தேவைப்பட்டால் வெளியிடுவோம். விசாரணை ஆணையம் கேட்டால் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவைக் கொடுப்போம். மேல்சிகிச்சைக்கு ஜெயலலிதாவை எங்கு அழைத்துச் செல்லலாம் என அமைச்சர்கள் ஆலோசித்த வீடியோவும் உள்ளது. ஜெயலலிதாவை கொச்சைப்படுத்த யார் முயன்றாலும் நாங்கள் விடமாட்டோம்" என்று கொந்தளித்தார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
`இதற்காகத்தான் ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்டோம்!' சொல்கிறார் வெற்றிவேல்
TAGS :
COMMENTS