[ad_1]

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றுவருகிறது.



காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதை அக்கட்சியின் தொண்டர்கள் நாடு முழுவதும் கொண்டாடினார்கள். ராகுல் காந்தி கட்சியின் தலைவராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து கட்சிப் பொறுப்பில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றப்பின், அவரது தலைமையில் முதல் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றுவருகிறது.

அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், குஜராத் மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்தும், அடிமட்ட அளவில் கட்சி அமைப்புகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கட்சிப் பொறுப்பிலும் மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.