[ad_1]





ராஜஸ்தானில் கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டியின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 





இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொளத்தூரில் கடந்த நவம்பர் 16-ம் தேதி நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்தனர். இந்த குற்ற வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நாதுராம் மற்றும் அவருடைய கூட்டாளிகள் என்பதை அறிந்த கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர், மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன், காவலர்கள் எம்புரோஸ், குருமூர்த்தி மற்றும் சுதர்சன் ஆகியோர் ராஜஸ்தானுக்கு கடந்த 8-ம் தேதி சென்று கொள்ளையர்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் குற்றவாளிகள் தங்கியிருந்த கூடாரத்தைச் சுற்றிவளைத்து இன்று அதிகாலை அவர்களைப் பிடிக்க முற்படும்போது, அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில், மதுரவாயல் சட்டம்- ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். தன் கடமை ஆற்றும்போது ஏற்பட்ட இந்த துரதிஷ்டமான சம்பவத்தில் உயிரிழந்த பெரியபாண்டியன் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.  மேலும், பணியின்போது உயிரிழந்த பெரிய பாண்டியன் குடும்பத்துக்கு தமிழக அரசின் சார்பில் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும், அவரது இரு மகன்களின் கல்விச் செலவை தமிழக அரசு முழுமையாக ஏற்கும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.


மேலும், இந்த சம்பவத்தில் காயமடைந்த முனிசேகர், எம்புரோஸ், குருமூர்த்தி, சுதர்ஷன் ஆகியோருக்குத் தலா ஒரு லட்சம் அளிக்கவும், அவர்களது மருத்துவச் செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகை திருடிய வழக்கு மற்றும் காவலர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டு தப்பிச் சென்றவர்களைக் கண்டுபிடித்து உடனடியாகக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.   
 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");