[ad_1]
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 2ஜி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2ஜி அலைக்கற்றைத் தொடர்பாக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளிலிருந்து அனைவரும் விடுதலை என்று ஒரே வரியில் தீர்ப்பு அறிவித்துவிட்டுச் சென்றுள்ளார் நீதிபதி ஓ.பி.சைனி.
சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் முக்கிய விவரங்கள் பின்வருமாறு.
``2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டவர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது. 2ஜி ஒதுக்கீட்டைத் தொடர்ந்து பணமோசடி நடைபெற்றதாகக் கூறப்பட்ட புகாரையும் நிரூபிக்கவில்லை. இதனால் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டபோது விதிக்கப்பட்ட நிபந்தனைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. அமலாக்கத்துறை பறிமுதல் செய்த ரூ.223.55 கோடி மதிப்பிலான சொத்துகளை விடுவிக்க வேண்டும். மேலும், கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் லஞ்சமாகக் கைமாறியது என்று புகார் கூறப்பட்டிருந்தது. அதற்கும் எந்த ஆதாரமும் இல்லை” என்று டெல்லி சிறப்பு நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
`பறிமுதல் செய்த சொத்துகளை விடுவியுங்கள்; - அமலாக்கத்துறைக்கு நீதிபதி சைனி உத்தரவு
TAGS :
COMMENTS