[ad_1]
மகாராஷ்ட்ராவில் புனே அருகிலுள்ள கிராமத்தில் கஞ்சர்பட் சமூகத்தைச் சேர்ந்த தம்பதியினர், அந்தச் சமூகத்தில் கடைபிடிக்கப்படும் கொடுமைக்கெதிராக வாட்ஸ்அப் மூலம் நண்பர்களை இணைத்துப் போராடுகிறார்கள்.
கஞ்சர்பட் சமூகத்தைச் சேர்ந்த கிருஷ்ணா, அருணா இந்த்ரேகர் ஆகியோரது திருமணம் 1996-ம் ஆண்டில் நடந்தது. முற்போக்கு சிந்தனை கொண்ட இருவரும், பல காலமாக அச்சமூகத்தின் பஞ்சாயத்தாரால் கடைபிடிக்கப்பட்ட கன்னித்தன்மையைச் சோதிக்கும் கட்டாயத்துக்கு உட்படாமல் எதிர்த்து நின்றனர். அந்த வழக்கத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். மேலும், அச்சமூகத்தைச் சேர்ந்த மக்களிடையே இக்கொடுமைக்கு எதிராக விழிப்புஉணவர்வைத் தூண்டும் வேலையிலும் ஈடுபட்டனர். இதனால், 2006-ல் இந்தத் தம்பதியை சமூகத்திலிருந்தே ஒதுக்கிவைத்தனர். அப்படித் தீவிரமாக எதிர்க்குமளவு அந்த வழக்கம் என்னவென்று பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் முதலிரவு திருப்தியாக நடந்ததா என்பதை சூசகமாகக் கண்டுபிடிப்பதற்காக பல்வேறு குறியீடுகளைக் காட்டுவார்கள். படுக்கையில் பூக்களும் மணப்பெண்ணின் சேலையும் கசங்கியிருக்கும், அல்லது நெற்றியில் வைத்த பொட்டு கலைந்திருக்கும், அல்லது மணமகனின் சட்டையில் மணமகளின் பொட்டோ, குங்குமமோ ஒட்டியிருக்கும். ஒருசில படங்களில் மணமகளின் கூரைப் புடைவையில் ரத்தக் கறை இருக்கிறதா என சோதிப்பதாகவும் காட்டுவார்கள். (இந்த ரத்தக்கறை மேட்டரெல்லாம் பாலியல் விழிப்புஉணர்வு காரணமாக பல காலங்களுக்கு முன்பே நம் ஊரில் முடிவுக்கு வந்துவிட்டது.) இந்த கஞ்சர்பட் சமூகப் பஞ்சாயத்திலோ இன்னமும் அந்த ரத்தக்கறை பரிசோதனை தொடர்கிறது.
photo courtesy: Pune Mirror
பஞ்சாயத்தின் கட்டளைப்படி, திருமணமானதும், முதலிரவு வெண்ணிற படுக்கையில்தான் நடத்தப்பட வேண்டும். அதில் ஏதேனும் ஏமாற்று வேலை செய்யக்கூடாதென்பதற்காக அன்றிரவு முழுக்க பஞ்சாயத்துப் பெருசுகள் அந்த வீட்டைச் சுற்றி அமர்ந்து கண்காணிப்பர். மறுநாள் அந்தப் படுக்கையில் ரத்தக்கறை இருக்கிறதா என அவர்களே பரிசோதிப்பார்கள். கறை இருந்தால், அப்பெண் கன்னித்தன்மையோடுதான் இருந்திருக்கிறாள் என்றும், இல்லையென்றால் அவள் கன்னித்தன்மையை ஏற்கெனவே இழந்துவிட்டாள் என்றும், தவறான நடத்தை கொண்டவள் என்றும் முடிவுக்கு வந்து அவளைக் கணவரிடமிருந்து பிரித்து வைப்பதோடு, அவளது எதிர்காலத்தையே ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார்கள்.
அந்தக் கன்னித்தன்மை சோதனை மிகவும் அபத்தமானது என்றும், கடுமையாக உழைக்கும் பெண்களுக்கும், விளையாட்டுத்துறையில் ஈடுபடும் பெண்களுக்கும் இந்த லாஜிக்கெல்லாம் பொருந்தாது என்றும், இப்படிச் சோதிப்பது, அப்பெண்ணின் தனிமனித உரிமையைப் பறிப்பதோடு, சட்டத்திற்கும் புறம்பானது என்றும் அச்சமூகத்தினர் உணராதிருக்கிறார்கள். எனவே, இச்சோதனைக்கு உட்படாமல், கிருஷ்ணா - அருணா தம்பதியினர் இந்தக் கொடுமையான மூடப்பழக்கத்தை எதிர்த்து நின்றனர். சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டாலும் மனந்தளராமல் அச்சமூக இளைஞர்களிடையே விழிப்புஉணர்வு செய்துவருகின்றனர்.
இதன் அடுத்தகட்டமாக, இத்தம்பதியினர், தற்காலத் தொழில்நுட்ப வசதியைக் கையிலெடுத்தனர். ஒரு வாட்ஸ்அப் குழுமத்தை "கன்னித்தன்மை சோதனையை நிறுத்து (Stop the 'V'Ritual)" என்ற பெயரில் தொடங்கினார்கள். அதில், அவர்களது சமூகத்தைச் சேர்ந்த முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞர்களை ஒருங்கிணைத்தனர். விழிப்புஉணர்வுள்ள நாற்பது பேர் வரை அக்குழுமத்தில் இணைந்தனர். அந்த வாட்ஸ்அப் குழுமம் குறித்து கேள்விப்பட்டதும், அதற்கும் எதிர்ப்பு வலுத்தது. கொலை மிரட்டல்கள், அச்சுறுத்தல்களின்மூலம் அக்குழுமத்தைக் கலைக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டார்கள்.
இதில் என்ன கொடுமை என்றால், தற்போது நிறைய படித்து கல்வியறிவோடு இருக்கும் சிலரும் அந்தக் கன்னித்தன்மைச் சோதனைப் பழக்கத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதுதான். அவர்கள்தாம் இந்தக் குழுமத்துக்கு எதிராக முரட்டுத்தனமாகச் செயல்படுவதாக கிருஷ்ணா வருத்தப்படுகிறார். எனினும், அத்தனை எதிர்ப்புகளையும் மீறி அக்குழுமம் செயல்பட்டு வருகிறது. சட்டத்துக்குப் புறம்பான அந்தப் பழக்கத்தை எவ்விதம் எதிர்ப்பது, அந்த விழிப்புஉணர்வையும் தைரியத்தையும் எவ்வாறு அச்சமூக மக்களுக்கு உணர்த்துவது என்பது குறித்தெல்லாம் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.
டாடா இன்ஸ்டிட்யூட் ஆப் சோசியல் சயன்ஸ் கல்லூரியில் படிக்கும் விவேக் தமைச்செகர் என்ற இளைஞர், இந்த குரூப்பை மேலும் விரிவுபடுத்தும்விதமாக, சமூகக்கொடுமை எதிர்ப்புப் பேரணி ஒன்றை பெரிய அளவில் நடத்துவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளார். கடந்த பத்தாண்டுகளாக கஞ்சர்பட் சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்ட தம்பதியினருக்கு தற்போது ஆதரவு பெருகிவருகிறது. விரைவில் மாபெரும் விழிப்புஉணர்வு அலையை உருவாக்கி, அந்த வழக்கத்தை முற்றிலுமாக நீக்குவோம் என நம்பிக்கையோடு தங்களது புரட்சிப் பயணத்தில் இருக்கிறார்கள்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
கன்னித்தன்மை சோதனைக்கு எதிராக வாட்ஸ்அப் மூலம் போராடும் தம்பதி!
TAGS :
COMMENTS