[ad_1]

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி எதிரொலியாக அந்த தொகுதியைச் சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட நிர்வாகிகளை நீக்கி தி.மு.க. தலைமை உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.





ஜெயலலிதா மறைவால் காலியாக இருந்த ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட தினகரன் வெற்றிபெற்றார். அ.தி.மு.க. இரண்டாவது இடம் பிடித்த நிலையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வின் வேட்பாளர் மருது கணேஷ் டெபாசிட் இழந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த தி.மு.க. தலைமை, இதுகுறித்து விசாரிக்க சட்டமன்ற கொறடா சக்கரபாணி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைத்தது. அந்த குழுவில் சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், சட்டத் துறை இணைச் செயலாளர் கண்ணதாசன் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். 


இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்வதற்காக ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உயர்நிலைக் குழுக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 29-ல் நடந்தது.  அந்த கூட்டத்தில், இடைத்தேர்தலில் சரிவர பணியாற்றாத நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், சக்கரபாணி தலைமையிலான குழுவினர் இடைத்தேர்தல் தோல்வி குறித்த விசாரணை அறிக்கையை தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினிடன் இன்று அளித்தனர். அந்த அறிக்கையில், ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அந்த தொகுதியில் உள்ள 14 வட்டக் கழகக் கிளைகள் கலைக்கப்பட்டதாகவும் தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சக்கரபாணி குழுவினரின் பரிந்துரையை ஏற்று தி.மு.க. தலைமை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. அந்த பொறுப்புகளுக்கு விரைவில் புதிய நிர்வாகிகள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.  
 
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");