[ad_1]
Chennai: துபாயில் நடைபெறும் உலக சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து, நேற்று நடைபெற்ற இந்தத் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் உலகின் 8-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் சென் யுபெ-வை 21-15, 21-18 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ஜப்பானின் அகானே யமாகுச்சி, தாய்லாந்தின் ரட்சனாக் இன்டனான்-ஐ 17-21, 21-12, 21-19 என்ற செட்களில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இறுதிப்போட்டியில் பி.வி. சிந்து, ஜப்பான் வீராங்கனையைச் சந்திக்கிறார். உலக சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் போட்டியின் இறுதிப்போட்டிக்கு சிந்து முதல்முறையாக முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
உலக சூப்பர் சீரிஸ் பேட்மின்டன்: பி.வி. சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!
TAGS :
COMMENTS