[ad_1]
வடகொரியாவுக்கு எதிராகக் கடுமையான தடைகள் விதிக்கப்படுவதற்கு ஐ.நா சபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில், தொடர் ஏவுகணை மற்றும் அணுகுண்டுச் சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் எதிர்ப்பையும் மீறி, அணு ஆயுதச் சோதனைகளை நடத்திவரும் வடகொரியாமீது, ஐ.நா சபை பொருளாதாரத் தடை விதித்துள்ளபோதும், அதை வடகொரியா பொருட்படுத்தவேயில்லை. இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் ஜப்பான் சென்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வடகொரியாவை வெளிப்படையாகவே தாக்கிப் பேசினார்.
இந்நிலையில், வட கொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க வகை செய்யும் தீர்மானத்தை அமெரிக்கா உருவாக்கியது. இந்த தீர்மானம் மீது நேற்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்குப் பல உறுப்பு நாடுகளும் ஒருமனதாக வாக்களித்ததால் தீர்மானமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனால் வட கொரியாவின் பெட்ரோல் இறக்குமதி 90% வரை குறையும் என்றே கூறப்படுகிறது. ஐ.நா-வுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே ஐ.நா. சபையில் இதுகுறித்த தீர்மானத்தை முன்வைத்து வாக்கெடுப்பை முன்னின்று நடத்தினார்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
வடகொரியாவுக்கு எதிராகக் கடுமையான தடைகள்: ஐ.நா-வில் தீர்மானம்
TAGS :
COMMENTS