[ad_1]

அஜித்தை வைத்து 'முகவரி', சிம்புவை வைத்து 'தொட்டி ஜெயா' எடுத்த இயக்குநர் வி.இஸட் துரையின் படம் 'ஏமாலி'. விரைவில் திரைக்கு வரப்போகும் இந்தப் படத்தின் டீசர் சில நாள்களுக்கு முன்பு வெளியானது. தற்போது இருக்கும் இளைஞர்களின் காதல் வாழ்க்கையைப் பற்றி சொல்லியிருக்கும் இந்தப் படத்தில் சமுத்திரகனி, சாம் அதுல்யா, பால சரவணன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.



யு சான்றிதழ் பெற்றிருக்கும் இந்தப் படத்தின் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி இருக்கிறார். 'ஏமாலி' படத்தின் பெயரில் இருக்கும் பிழைக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள படத்தைப் பாருங்கள் என்று இயக்குநர் ஏ.இஸட்.துரை சொல்லியிருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று இணையத்தில் வெளியானது.